• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

மகரம்

மகரம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 18, 2021 - April 24, 2021

  • Share this:
    மகரம்: இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

    பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசியல்துறையினருக்கு உடல் நலம் பாதிக்கும். தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

    பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: