• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கும்பம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

Rasi Palan : கும்பம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

கும்பம்

கும்பம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 18, 2021 - April 24, 2021

  • Share this:
    கும்பம்: இந்த வாரம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

    மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. கலைத்துறையினர் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்துறையினர் தங்கள் பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வழக்குகள் சாதகமாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;

    பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: