Rasi Palan : கடகம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

Rasi Palan : கடகம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

கடகம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 18, 2021 - April 24, 2021

  • Share this:
    கடகம்: இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

    தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும்.

    பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

    கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
    Published by:Vijay R
    First published: