• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Horoscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

Horoscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

தனுசு

தனுசு

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 11, 2021 - April 17, 2021

  • Share this:
    தனுசு: இந்த வாரம் குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும்.

    உத்தியோகஸ்தர்கள் உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.

    பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். பெண்கள் பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.

    கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற நேரம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். கனவுகளில் நேரத்தை செலவிடாதீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி

    பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்று.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: