Rasi Palan : துலாம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : துலாம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

துலாம்

பணவரத்து சீராக இருக்கும். புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    துலாம் : (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

    புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு வேலைப்பளு ஏற்படும். அரசியல்வாதிகளின் மீது மேலிடத்தின் கவனம் விழும்.

    Read more : துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: