Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

தனுசு

நீண்ட காலமாக நிலவி வந்த வெறுமை நிலை மாறும், கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும்... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு: (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

    இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இடுதல் கூடாது.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். நீண்ட காலமாக நிலவி வந்த வெறுமை நிலை மாறும்.

    பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு  புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.

    Read more : தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

    பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: