Rasi Palan : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

சிம்மம்

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும்.... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்: (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

    இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரி பார்க்கவும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும்.  உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது.

    பெண்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக  படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு குழப்பம் நீங்கும். அரசிய்லவாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

    Read more : சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

    பரிகாரம்:  தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: