Rasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் சுமை நீங்கும்... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

    இந்த வாரம் சுகம் அதிகரிக்கும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

    தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் சுமை நீங்கும். பங்குதார்களுக்குள் இருந்து வந்த வேற்றுமை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற  வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.

    பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். மேலிடத்தின் கருணை கிடைக்கும்.

    Read more : ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    பரிகாரம்:  அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: