Rasi Palan : மேஷம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : மேஷம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள்  (மே 02 முதல் மே 08 வரை)

மேஷம்

மேஷ ராசியினருக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும்.... கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்:  (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புதிய வீடு வாகன சேர்க்கை ஏற்படும். பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சாதுர்யமாக சமாளித்து முன்னேறுவீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

    பெண்களுக்கு தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆதராவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருக்கும் மனத்தாங்கல்கள் அகலும்.

    Read more : மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

    பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: