Rasi Palan : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

மீனம்

தொழில் விரிவாக்கம் பெறும், பழைய பாக்கிகள் வசூலாகும், நிதி நிலைமை உயரும்.... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு நீங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத  சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.

    பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு காரியங்களில் வேகம் பிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் பிறக்கும்.

    Read more : மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    பரிகாரம்: வியாழக்கிழமை அன்று நவக்கிரகங்களை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: