Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் (மே 02 முதல் மே 08 வரை)

மகரம்

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும்.... கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம்,  அவிட்டம் 1,2 பாதம்)

    இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும்.

    பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும்.

    Read more : மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், மே 2021

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    பரிகாரம்: சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: