Horoscope : மிதுனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

மிதுனம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    மிதுனம்:  யாரிடமும் சகஜமாக பேசும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன்  செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும்.

    தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.  வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும்.

    உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகளின் பாராட்டு  தெம்பைக் கொடுக்கும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உறவினர்கள் வருகையினால் குடும்பச் செலவுகள்  கூடும்.

    பெண்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துப் பிரச்சினையும் தீரும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.

    மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள்.

    பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
    Published by:Tamilmalar Natarajan
    First published: