Horoscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

மீனம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    மீனம்: அனைவரையும் கவரும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை வாட்டி வதைத்து வந்த பிணி, பீடைகள் உங்களை விட்டு விலகும். நீண்டநாள் பிரிந்து வாழ்ந்த தம்பதியர்  ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். உறவினர் வருகை, சுபகாரியப்  பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும்.

    தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும்.  எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள்.

    உத்யோகஸ்தர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்துவரும் அதிகாரிகள் சிலர்  லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள்.

    குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர்  நல்ல லாபம் பெறுவார்கள்.

    பெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும்.

    மாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு  செல்லும் திட்டம் நிறைவேறும்.

    பரிகாரம்: நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.
    Published by:Tamilmalar Natarajan
    First published: