Horoscope : மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

மகரம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    மகரம்: அனைத்து இடங்களுக்கும் முன்னோடியாக திகழும் மகரம் ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை  வாய்ப்பை அடைவார்கள்.

    தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள்  உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும்.

    உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக  முடியும்.

    குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும்.

    பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள்.

    மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும்.

    பரிகாரம்: அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
    Published by:Tamilmalar Natarajan
    First published: