Horoscope : கடகம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

கடகம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    கடகம்: யாரையும் பகைக்காமல் நண்பனாக பாவிக்கும் கடக  ராசி அன்பர்களே, இந்த வாரம் புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். நீண்ட நாட்களாக குழந்தை  பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும்

    தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி புதிய தொழில் தொடங்குவதோடு, புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. சிலர் வீடு மாற்றம் செய்வார்கள்.

    உத்யோகஸ்தர்கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள்.

    குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள்  இருக்கும். இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

    பெண்கள் உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில்  இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும்.

    மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    Published by:Tamilmalar Natarajan
    First published: