Horoscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

தனுசு

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    தனுசு:ரகசியங்களை காக்கும்  தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும்.  மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம்  கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

    தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வந்துசேரும். சிலர் ஆர்டர் நிமித்தம் வெளிநாடு  சென்று வருவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும். வியாôபரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும்.

    உத்யோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். புதிய வேலைகள் மேலிடத்திலிருந்து கிடைக்கும். அதற்கான  ஊதியமும் கிடைக்கும்.

    குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும்.

    பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து  வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும்.

    மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

    பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: