Horoscope : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை

ரிஷபம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 14, 2021 - March 20, 2021

  • Share this:
    ரிஷபம்: என்றும் துடிப்புடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த  பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்  மூலம் முன்னேற்றம் காண முடியும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில்  தாமதம் ஏற்படும்.

    குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதங்கள்  உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிப்பது நல்லது.

    பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம்  ஏற்பட்டு நீங்கும்.

    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.

    பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: