Rasi Palan : விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை): இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதே வேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

    பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணிகள் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

    பரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
    Published by:Vaijayanthi S
    First published: