ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 25, 2022) புதிய வேலை கிடைக்குமாம்!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 25, 2022) புதிய வேலை கிடைக்குமாம்!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களது வாழ்வில் ஏதாவது விஷயத்தை முழுமையாக செய்யவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அதே சமயம் இப்போது செய்ய வேண்டாம். செய்யும் காலம் வரும்போது செய்துக் கொள்ளுங்கள். படிப்பில் உங்களது பிள்ளைகள் கவனக்குறைவுடன் இருக்க நேரிடும். நீங்கள் மெட்டல் பிஸினஸ் செய்பவர்களாக இருந்தால் உங்களது லாபத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.உங்களது வாழ்க்கையில் நீங்கள் இழந்த முக்கியமான விஷயம் மீண்டும் உங்களிடம் திரும்ப வரக்கூடும்.

உங்களின் அதிர்ஷட அடையாளம் – கீ கோல்டர் (A Key holder)

ரிஷபம்:

இன்றைய நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு தேவைப்படுகிறீர்கள் என்றால் நிச்சயம் இந்நாள் உதவக்கூடும். உங்களது வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்க முயலுங்கள். மற்றவர்களிடம் நீங்கள் எதையும் பேசுவதற்கும், சொல்வதற்கும் முன்னதாக யோசித்து சொல்லவும். இது உங்களை பல பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றக்கூடும். உங்களின் முக்கியமான ஆவணங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி

மிதுனம்:

இந்நாளில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சில அதிருப்திகளை அடையக்கூடும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். பிஸினஸில் மற்ற பாட்னர்களுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படக்கூடும். எதிர்பாரதவிதமாக நண்பர்களுடன் சுற்றுலா செல்ல நேரிடும். இது உங்களது மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எந்த விஷயத்திலம் சிக்கல் இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் நாளாக அமையும். உங்களது உடல் நலப் பிரச்சனைகளை புறக்கணிக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ கூடாது.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு புதிய விளையாட்டு

கடகம் :

புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படுவதோடு எப்போதும் பிஸியாக இருப்பீர்கள். உங்களுடைய அலட்சியத்தால் முக்கிய வேலைகளை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் குழந்தைகளின் அசாத்திய சாதனைகள் உங்களை ஆச்சரியப்படுத்த உதவும்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மின்சார கேஜெட்.

சிம்மம்:

உங்களது வாழ்க்கையில் எந்தக்கட்டத்திலும் நீங்கள் நம்பிக்கையற்றவராக உணர்ந்தால், அதை நீங்கள் கடந்து செல்ல வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பணியில் இருக்கும் உங்களது சீனியர்கள் வேலையை மதிப்பாய்வு செய்ய விரும்பலாம் எனவே கவனமுடன் இருந்துக் கொள்ளுங்கள். உங்களது தூரத்து உடன்பிறப்புகள் மற்றம் உறவினர்கள் வருகைக்கு திட்டமிடலாம். உங்களது வாழ்க்கையில் குறுகிய கால இலக்குகளை உருவாக்கியிருந்தால், அவற்றை உங்களால் நிச்சயம் முடிக்க முடியும்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – ஏரி

கன்னி:

இன்றைய நாளில் வாழ்க்கையில் அடைய விரும்பும் இலக்குகளை அடைவீர்கள். புதிய வேலைகள் கிடைக்கும் நாளாக அமையக்கூடும். உங்களின் திறமை மற்றும் வேலைவாய்ப்புகளை பலர் பாராட்டக்கூடும். உங்களது வாழ்க்கையில் தன்னிச்சையாக செயல்படும் நாளாக அமையும். எதிர்பாராதவிதமாக விரைவில் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – புதிய ஆடைகள்

துலாம்:

இன்றைய நாளில் உங்களது வாழ்க்கையில் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலைகளை மற்றவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதால், வேலை நேரத்தில் செய்யும் பணிகளை ஆர்வத்துடன் செய்துவிடுங்கள். உங்களது வேலை நேரத்தில் உங்களது அதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். இருந்தப்போதும் நிதானம் தவறாதீர்கள். வாழ்க்கையில் மற்றவர்களின் உதவியை நாடும் நாளாக அமையும்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – கழுகு

விருச்சிகம்:

இன்றைய நாளில் நீங்கள் பணிபுரியும் இடத்தில் புதிய வளர்ச்சியைப் பெறுவீர்கள். இருந்தப்போதும் தேவையற்ற பிரச்சனைகளுக்கு வாதிடும் சூழலும் ஏற்படக்கூடும். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் நினைத்தால் போதும்.

உங்களின் அதிர்ஷ்ட அடையாளம் – சாமந்தி மலர்

தனுசு:

வேலையில் உங்களது பலத்தை நிரூபிக்கும் நாளாக அமையும். முன்னதாக செய்த வேலைகளையும் அதிகாரிகள் கவனிப்பார்கள் என்பதால் பொறுப்புடன் இருக்க வேண்டும். உங்களுடைய உறவுகளால் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். நீங்கள் செய்யும் விஷயங்களில் சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும் அதை அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளிடம் உள்ள புதிய திறமையை வெளிப்படுத்தக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டாம் பூச்சி

மகரம்:

உங்களின் திறமையைப் பார்த்து மற்றவர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். சில காலமாக அழைக்காத உறவுகள் உங்களை அழைக்க நேரிடும். நிச்சயம் உங்களது திறமையை வெளிப்படுத்த சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். வயதான நபர்கள் உங்களது திறமையை விமர்சித்தாலும் பொருத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பர் ஸலீபர்

கும்பம் :

விளையாட்டில் உங்களுடைய திறமையை அதிகரிக்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை குறைவாக வைத்திருப்பது நன்மை பயக்கும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் . தேவையில்லாத பிரச்சனைகளால் பணியிடத்தை மாற்றுவதற்கான சூழல் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

மீனம் :

இந்நாளில் யாருக்காகவும் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தேவையில்லை. நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வது புதுவிதமான சந்தோஷத்தை ஏற்படுத்தும். கடந்த காலத்தை ஒருபோதும் நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள். இது தேவையற்ற பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தும். வங்கி தொடர்பான பிரச்சனைகளை இந்நாளில் நீங்கள் சந்திப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டாரட் அட்டை

Published by:Anupriyam K
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan, Zodiac signs