Home /News /spiritual /

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று ( ஆகஸ்ட் 28, 2022) நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று ( ஆகஸ்ட் 28, 2022) நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்

ராசிப்பலன்

ராசிப்பலன்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 28) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று நீங்கள் திட்டமிடும் பணிகளில் தடைகள் ஏற்படலாம். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் மற்றும் மோதலை தவிர்க்க பாருங்கள். இன்று எதிலாவது முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் அதை தள்ளிப் போடுவது நல்லது. சொத்து ஒப்பந்தங்களை முடிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்க நினைவில் கொள்ளுங்கள்.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: கிரே

பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபர்களுக்கு உதவுங்கள்

ரிஷபம்:

இன்று வியாபாரத்தில் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஹோல்சேல் பிசினஸ் செய்பவர்களுக்கு இன்றைய பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன், பெரியவர்களின் கருத்தை கேளுங்கள்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: லைட் கிரீன்

பரிகாரம்: எறும்புகளுக்கு மாவும் சர்க்கரையும் கலந்து வைக்கவும்

மிதுனம்:

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் வியாபாரத்தில் சில புதிய திட்டங்களுக்கான வேலைகளை இன்று துவக்கலாம். காதல் வாழ்க்கைக்கு நல்ல நாள். சில முக்கிய நபர்களை சந்திப்பது வியாபார ரீதியாக உங்களுக்கு உதவலாம்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கை ஏற்றவும்

கடகம்:

தொழில் துறையில் இருப்பவர்கள் தங்களது மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இன்று உங்களது ஆரோக்கியம் சீராக இருக்கும் மற்றும் உங்கள் நம்பிக்கையின் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

ராசியான எண்: 10, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுக்கவும்

சிம்மம்:

வியாபாரம் மற்றும் பணவரவை பொறுத்த வரை இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆனால் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் தவறான ஒரு சிறு வார்த்தை உங்களை சிக்கலில் மாட்டிவிடும். மேலும் வீட்டிற்கு உறவினர்களிடமும் பேச்சில் கவனம் வேண்டும்.

ராசியான எண்: 10, ராசியான நிறம்: கோல்டன்

பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்

கன்னி:

இன்று உங்களது வழக்கமான வருமானத்தில் பாதிப்பு இருக்காது. நிதி சார்ந்த சிக்கல்கள் தீரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கடன் வாங்க முடிவு செய்வீர்கள். உங்கள் பெரிய பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரலாம்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: ஸ்கை ப்ளூ

பரிகாரம்: ராமர் கோவிலுக்கு கொடி காணிக்கை செலுத்தவும்

துலாம்:

உங்கள் பிசினஸ் பார்ட்னர் அல்லது நெருங்கிய கூட்டாளியுடன் பிரச்சனை ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக இன்று நீங்கள் செய்யும் பயணங்கள் எதிர்பார்த்த பலனை தராது. புதிய பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைத் தொடங்க நினைத்தால் இன்று அதற்கு சாதகமான நாள் இல்லை.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: மஞ்சள்

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்

விருச்சிகம்:

தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு இன்று நேரத்தை வீணடித்தால் பணத்தை இழக்க நேரிடும், மேலும் வரும் புதிய லாபகரமான வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உங்களது பொருளாதார நிலை சற்று மேம்படும்.

ராசியான எண்: 6, ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: சிவபெருமானுக்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்

தனுசு:

கடன் பற்றிய கவலை இருக்கும், உங்களது அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய இன்று கடன் வாங்க வேண்டியிருக்கும். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். பிரச்சனையால் வேலை பாதிக்கப்படலாம். இவற்றால் உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்க கூடும்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: பிங்க்

பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு தேங்காய் கொடுக்கவும்

மகரம்:

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்று பணம் அதிகம் செலவாகலாம், நேரத்திற்கு தகுந்தாற் போல வேலைகளை செய்து முடிக்கவில்லையெனில் எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பழிவாங்கும் உணர்வை கைவிடுங்கள்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: காலை எழுந்ததும் சூரியனை வழிபடுங்கள்

கும்பம்:

உங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையைபொறுத்த வரை கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரிக்க கூடும், இதனால் வீட்டில் டென்ஷன் காணப்படும். இன்று நீங்கள் திட்டமிட்டிருந்த சிலவேலைகள் தடைபடலாம்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: கோல்டன் கலர்

பரிகாரம்: பசுக்களுக்கு புற்கள் போன்ற பசுந்தீவனம் கொடுங்கள்

மீனம்:

இன்று பணத்தை செலவழிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள், இல்லையெனில் எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்திற்காக வாய்ப்புகள் கிடைக்கலாம். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் இன்றைய நாளை செலவழியுங்கள்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: வயலட்

பரிகாரம்: மஞ்சள் கலந்த அலல்து மஞ்சள் நிற உணவுகளை தானம் செய்யுங்கள்
Published by:Ramprasath H
First published:

Tags: Money, Rasi Palan, Tamilnadu

அடுத்த செய்தி