ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 30, 2022) புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 30, 2022) புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

ஆச்சரியம் தரும் வகையிலான புதிய வாய்ப்புகள் வர இருக்கின்றன. அவை குறித்து பரிசீலனை செய்யலாம். உங்கள் பெற்றோரை மையமாக வைத்து நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க இருக்கிறது. உங்களுக்கு நிம்மதியான உணர்வு ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டேட்டூ

ரிஷபம்:

சில நபர்களுக்கு வேடிக்கையான விஷயங்களை செய்து பார்க்கும் ஆர்வம் இருக்கும். அது குறுகிய காலத்திற்கு மட்டுமே மகிழ்ச்சி தரும். அத்தகைய நபர்களை எதிர்கொள்வதில் உங்களுக்கு சிக்கல் நீடிக்கும். வணிகத்தில் தற்காலிக முதலீட்டு பிரச்சினைகள் வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

மிதுனம்:

நீங்கள் முயற்சி செய்து வரும் விஷயங்களில் தற்போது பலன் கிடைக்கும். சினிமா அல்லது தயாரிப்பு தொழிலில் இருப்பவர்கள் என்றால் உங்கள் பணியை விரிவுபடுத்துவதற்கான ஒத்துழைப்பு வெகு விரைவில் கிடைக்கும். சிறு வணிகர்களுக்கு கடன் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நைட்டிங்கேல்

கடகம்:

ஆன்மீக நிகழ்வு ஒன்றில் நீங்கள் கலந்து கொள்ள இருக்கிறீர்கள். பயணங்களுக்கான நேரம் இது. சின்ன வாக்குவாதம் தான் மாபெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். ஆகவே, அதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள இளம் பருவத்தினர் மூலமாக சிக்கல் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோப்-வே

சிம்மம்:

உங்களுக்கான அதிர்ஷ்டம் வர இருக்கிறது. அதே சமயம், குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகலாம். எல்லைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை உணரும் திறனை நீங்கள் பெற வேண்டும். அடிப்படை அறிவு குறித்து பாடம் கற்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோல்டன் கேட்

கன்னி:

எல்லாமே உங்கள் நடத்தை சார்ந்து இருக்கிறது. வாய்ப்பு ஏற்கனவே உங்களை தேடி வந்து விட்டது. நீங்கள் தான் அதனை கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். பொது இடங்களில் பணம் கையாளுவதை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி

துலாம்:

நல்லதொரு காரியத்தை கையில் எடுத்தால், அதனை நோக்கி உள்ளார்ந்த எண்ணத்துடன் செயல்படவும். மற்றவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தேவையற்ற விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டம்ளர்

விருச்சிகம்:

உங்கள் கவனம் மிகக் கூர்மையானதாக இருக்கிறது. இந்த உற்று நோக்குதலைக் கண்டு உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேவையான காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகதக்கல்

தனுசு:

மற்றவர்கள் குறித்து மிக தீவிரமாக சிந்திப்பதை கைவிட வேண்டும். உங்கள் நேர்மை சந்தேகத்துக்கு உரியதாக மாறும் பட்சத்தில் இரண்டு அடி பின்வாங்கவும். ஆராய்ச்சிப் பணிகளில், புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

மகரம்:

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் பிறரது நம்பிக்கையை நீங்கள் பெற வேண்டும். பணியிடத்தில் உங்கள் பணிகள் குறித்து சீனியர்களுக்கு திருப்தி இருக்காது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி

கும்பம்:

மன நலன் இப்போது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பல விஷயங்களை உங்கள் மனதில் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். உங்கள் கவலையை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கக்கல்

மீனம்:

எந்தவொரு பிரச்சினையும் தீவிரமானதாக மாறும் முன்பாக அதற்கு தீர்வு காணவும். காதலுக்குரிய நபர்களுடன் பிரச்சினை எதுவாக இருந்தாலும், உட்கார்ந்து பேசி தீர்வு காணுங்கள். சின்ன விஷயங்களை மனதில் பூட்டி வைத்தால் இடைவெளி அதிகமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தலைப்பாகை

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks