ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 28, 2022) புதிய முயற்சிகள் வெற்றியை தரும்...!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 28, 2022) புதிய முயற்சிகள் வெற்றியை தரும்...!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்களது எனர்ஜி லெவல் இன்று அதிகமாக இருக்கும் என்பதால் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சச்சரவுகள் ஏற்படலாம், அதனால் மன உளைச்சலுக்கு நீங்கள் ஆளாகலாம். எனினும் நீங்கள் வேலைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். உங்களது நெருங்கிய நண்பரின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் உங்களை இன்று வழிநடத்தும். இதனால் நீங்கள் பாசிட்டிவாக செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: பசு மாடுகளுக்கு பச்சை புல் அல்லது கீரையை கொடுக்கவும்

ரிஷபம்:

சில முக்கியமான விஷயங்களை இன்று மீண்டும் நீங்கள் புதிதாக தொடங்க வேண்டிய நிலை ஏற்படும். எங்கே தவறு செய்தீர்கள் என்று திரும்பி பார்த்து அதனை சரி செய்து கொள்ளுங்கள். தேவையற்ற மாற்றங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கலாம். எனினும் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்

மிதுனம்:

இன்று நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். எனினும் ஒரு விஷயங்களில் ஈடுபடும் முன் மற்றவர்களின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளுங்கள். சூழ்நிலையில் சுணக்கம் இருந்தால் உங்கள் முயற்சியால் அதனை மாற்ற முடியும். உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

பரிகாரம்: ஏழைக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்

கடகம்:

வாழ்க்கையில் இப்போது இருப்பதை விட இன்னும் முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட கூடும். பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நிதானம் மற்றும் பொறுமை உங்களை இன்று அமைதியாக வைத்திருக்கும்.

பரிகாரம்: பறவைகளுக்கு தானியம் கொடுங்கள்

சிம்மம்:

இன்று நீங்கள் ஆவேசமாக மற்றும் கொந்தளிப்புடன் இருக்க கூடிய சூழல் ஏற்படும். எனினும் எந்த நிலையிலும் அமைதி மற்றும் நிதானத்தை தவற விடாதீர்கள். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள் மற்றும் அவசர வேலைகள் இருந்தால் இன்று செய்யாமல் அதனை ஒத்தி வையுங்கள். உங்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சிறிய பிரச்சனைகளை கூட பெரிய பிரச்சனையாக பார்ப்பீர்கள்.

பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்

கன்னி:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பம் & சமூகத்தில் உங்களுக்கான மரியாதை கூடும். இன்று உங்கள் வாழ்க்கை சமநிலையாக இருப்பதை உணர்வீர்கள்.

பரிகாரம்: மாற்று திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்

துலாம்:

நெருங்கிய உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்பட கூடும் என்பதால் பேச்சு மற்றும் செயல்களில் கவனம் தேவை. இன்று மனம் அமைதியாக இல்லாதது போல உணர்வீர்கள். இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே இன்றைய நாளை சாதகமாக மாற்ற தியானத்தில் ஈடுபடலாம்.

பரிகாரம்- எறும்புக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்

விருச்சிகம்:

இது நாள் வரை என்ன முடிவெடுப்பது என்று நீங்கள் குழம்பி தவித்த விஷயங்களில் இன்று தெளிவான முடிவை எடுப்பீர்கள். இன்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்வீர்கள். உங்களுக்கான சொந்த பாதையை நீங்களே இன்று உருவாக்கி கொள்வீர்கள்.

பரிகாரம்- அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்

தனுசு:

இன்றைய நாளில் நீங்கள் நினைத்தது போல எல்லா விஷயங்களும் நடக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். பல நாட்களுக்கு பிறகு இன்று டென்ஷன் குறைவான நாளாக இருக்கும். இன்று நீங்கள் ஈடுபடும் பல விஷயங்கள் உங்களின் எதிர்கால வெற்றியை உறுதி செய்யும்.

பரிகாரம்- சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்

மகரம்:

இன்று நேர்மறைகள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும் என்றாலும் முக்கியமான வேலையை முடிக்க பெரிய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். இலக்கை நோக்கிய உங்களது உழைப்பும், முயற்சியும் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதால் சோர்வாக அல்லது வெறுப்பாக உணர்வீர்கள்.

பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்

கும்பம்:

உங்களது எனர்ஜி லெவல் இன்று அதிகமாக இருக்கும் என்பதால் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மேலும் இதுநாள் வரை இருந்த மனஅழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய வேலைகளை துவக்க இன்று சிறந்த நாள்.

பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடியை காணிக்கையாக செலுத்தவும்

மீனம்:

இன்றைய நாள் உங்களது வெற்றி,மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். பலருக்கும் இன்று நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பீர்கள். எதிர்காலத்தை திட்டமிடும்போது நிகழ்காலத்தில் என்ன சூழ்நிலை என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுங்கள்.

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றுங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks