ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 26, 2022) பணப்புழக்கம் அதிகரிக்கக்கூடும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 26, 2022) பணப்புழக்கம் அதிகரிக்கக்கூடும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்கள் நெருங்கிய உறவினருக்கு நிரந்தரமான வேலை தேவைப்படலாம், அதைப் பற்றி உங்கள் பங்குதாரரிடம் தெரிவித்திருந்தால் அவரை அடிக்கடி பார்த்து வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக பேச வேண்டும். எதிர்நீச்சல் அடிப்பது எல்லா நேரத்திலும் கைகொடுக்காது, எனவே சில விஷயங்கள் ஒத்துவரவில்லை என்றால் அதனை விட்டு விலகி இருப்பது நல்லது. வேலை நேரத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முக்கோண ஸ்படிகம்

ரிஷபம்:

இன்று சோம்பல் உணர்வு தலைதூக்கக்கூடும் என்பதால், தேவையில்லாமல் கூடுதல் வேலைகளை கையிலெடுக்க வேண்டாம். இன்று முறையாக திட்டமிடாவிட்டாலும் திடீர் ஷாப்பிங் செய்ய வாய்ப்புள்ளது. இன்றைய தினம் உங்கள் ஆற்றல் சிறிது, சிறிதாக விரையம் ஆகுவது போல் தோன்றலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி குடுவை

மிதுனம்:

இன்றைய தினம் வேலை விஷயமாக நீங்கள் பரபரப்பாக இருந்தாலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுக்காக நேரம் ஒதுக்கவும் முயற்சி செய்யுங்கள். அப்போது தான் வேலை மற்றும் குடும்பம் இரண்டிலும் சமநிலையை கடைபிடிக்க முடியும். உங்களுடைய ஆரோக்கியமான தினசரி நடவடிக்கையில் புதிதாக ஒரு ஆன்மீக செயல்பாடு வந்து சேரலாம். விரைவில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீரூற்று

கடகம்:

அலுவலக வேலைகளை இன்று யாருடனானவது இணைந்து செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்களுடைய பணிச்சுமையை குறைக்க உதவும். இன்று கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலை வரும் போது, நீங்கள் வேறு ஒரு விஷயத்திற்காக நேரம் ஒதுக்கியது தொடர்பாக யாரோ நினைவுப்படுத்தக்கூடும். விளையாட்டில் ஈடுபடுவது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க உதவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பழைய கடிகாரம்

சிம்மம்:

அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக உங்கள் வேலைகளை கண்காணிக்கக்கூடும்.. ஏற்கனவே வேலை மீது நம்பிக்கை இழந்துள்ள இந்த தருணத்தில், இப்படியொரு நிலை வருவதால், உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான வானம்

கன்னி:

யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அவர்கள் உங்களை இதுவரை மன்னித்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களிடம் மாற்றங்களை கொண்டு வர நீங்கள் அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்கள் நேரம் சமரசத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது. நெருங்கிய நண்பர்களுடன் சின்ன டிரிப் செல்ல திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வரிசையான எண்கள்

துலாம்:

அலுவலக பணியாளர்கள் பணியிடத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும், ஏனெனில் இன்று நீங்கள் ஈடுபாடுடன் செய்யக்கூடிய வேலையால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அக்கம்பக்கத்தினரிடம் வரும் பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இன்றைய தினம் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை காதலர்களிடம் ஒளிவீசத் தொடங்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சில்க் தாவணி

விருச்சிகம்:

சலிப்பான, மெதுவாக நகரக்கூடிய இன்றைய நாளை, சில நல்ல செய்திகள் மாற்றலாம். அதிகப்படியான சோர்வால் இன்று வேலையில் இருந்து ஓய்வெடுக்க நீங்கள் முடிவெடுக்கலாம். வெளிநாடு அல்லது வெளியூரில் இருக்கும் உறவினர் அல்லது நண்பரை தொடர்பு கொண்டு பேச இன்று வாய்ப்புள்ளது,

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வலை

தனுசு:

அலுவலகத்தில் சிறிய பிரச்சனையை சரியாக கையாளாததால் பணிச்சூழ்நிலை அமைதியற்றதாக மாறலாம். இன்று வேலைப்பளு அதிகரிக்கூடும். எந்த வித அறிவிப்பும் இல்லாமல் பழைய நண்பர் ஒருவர் உங்களை காண நேரில் வர வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலர் அலங்காரம்

மகரம்:

உங்கள் முக ராசிக்கு கிடைக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். இன்று கொஞ்சம் ஓய்வெடுக்க திட்டமிடலாம். ஒருவரது பணியை மதிப்பாய்வு செய்யும் முன்பு நீங்கள் சொல்லும் விஷயங்கள் எவ்வளவு உண்மையானது என்பதை முன்கூட்டியே உணர்த்த வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கேன்வாஸ் ஷூ

கும்பம்:

இன்றைய தினம் பார்ட்னர்ஷிப் அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கூடும். அதனை மேலோட்டமாக பார்க்கும் போது ரூட் கிளியராக இருப்பது போல் தெரிந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் முன்பு தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் வழிகாட்டுதலின் படி, போட்டி நிறுவனங்கள் அல்லது போட்டியாளர்களுடன் ஊழியர்கள் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கழுகு

மீனம்:

நெருங்கிய நண்பர் ஒருவர் தனது குடும்ப பிரச்சனைக்காக உங்கள் உதவியை நாடக்கூடும். முன்பின் தெரியாத யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் சேர்த்து வைத்த பணம் கைகொடுக்கும். விரைவில் பணப்புழக்கம் அதிகரிக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய குவளை

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks