ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 25, 2022) புதிய வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 25, 2022) புதிய வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய நாள் விறுவிறுப்பாக இருக்கும். உங்கள் ஆற்றல் முழுவதையும் இலக்கு நோக்கி செலவழிப்பீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும், அது வெகு விரைவில் கட்டுக்குள் வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓபல்

ரிஷபம்:

யாரையேனும் தொடர்பு கொள்வதை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறீர்கள் என்றால், அவர்களை அழைத்துப் பேச இன்று சரியான தருணம் ஆகும். உங்கள் உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால் அன்றாட உடற்பயிற்சி அவசியமானது. நல்லதொரு வணிக வாய்ப்பு தேடி வர இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற படிகக்கல்.

மிதுனம்:

இன்று ஆற்றல் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளவும். புத்தாக்க சிந்தனைகளை செயல்படுத்தி முடிப்பீர்கள். இதனை செயல்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கக்கல்.

கடகம்:

புதிய நண்பர் உங்கள் வாழ்க்கையை கடந்து செல்ல இருக்கிறார். அவரிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்ப விவகாரங்களில் உடனடி கவனம் தேவை. வெளி நபர்களின் தலையீடு எரிச்சல் அடைய வைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு நிழல்.

சிம்மம்:

உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் உங்களுக்கு சொந்தமானதாக மாறும். புதிய பழக்கம் ஒன்றை பழகிக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்றால், அது சிரமம் உடையதாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அட்டைப்பெட்டி.

கன்னி:

உங்களின் அன்புக்குரிய நபர்களுக்கு உங்களின் கனிவான அக்கறை தேவை. உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் சிந்தனைகள் தோன்றும். வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

துலாம்:

பணியிடத்தில் சில பிரச்சினைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இன்று முழுமையான தூக்கம் அவசியம். ஓய்வின்றி இருக்கக் கூடாது. சில நண்பர்கள் மாலையில் உங்களை பார்க்க வரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

விருச்சிகம்:

எதிர்வரும் குடும்ப விழாவுக்காக நீங்கள் செய்யும் ஏற்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும். இன்றைய நாளின் முன்னுரிமைகளை பட்டியலிடுவதன் மூலமாக நேரத்தை சேமிக்கவும். புதிய வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

தனுசு:

உங்களுக்கு பல விதங்களில் அசௌகரியம் நேரிட்டாலும், வெகு விரைவில் சாதகமான செய்தி தேடி வரும். ஆற்றல் முழுவதும் ஒரு திசையை நோக்கி உருவெடுப்பதால் அது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரக் கூடும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக குடும்பத்தினர் உங்களை ஆலோசிக்க மாட்டார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு ஆடை

மகரம்:

ஒரு விஷயத்தை செய்து பழகுவதன் மூலமாக நேரத்தை சேமிக்கலாம். இது உங்களுக்கு புதிய திறனை கற்றுக் கொள்ள உதவியாக அமையும். உங்களுக்கான வழிகாட்டி அருகாமையில் இருக்கிறார். உங்கள் பதவியை அடைய ஏராளமானோர் முயற்சி செய்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

கும்பம்:

உங்களின் வளர்ச்சிக்கு முகம் தெரியாத நபர்கள் சிலர் உதவியாக இருப்பார்கள். ஆழமாக யோசித்தால் உங்களுக்கு ஆச்சரியமான முடிவுகள் தெரிய வரும். தோராயமான முடிவுகள் முன்னேற்றத்தை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகத கல்

மீனம்:

உங்களை நீங்கள் வெளிப்படுத்துவதற்கு மிக அழகான நாள் ஆகும். புதிதாக தொடங்கும் ஒரு விஷயம் உங்கள் தினசரி பழக்கமாக மாறும். கடந்த கால சாதனைகளை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள். புதிய வாய்ப்பு வர இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

First published:

Tags: Oracle Speaks