ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 22, 2022) நீண்டகாலமாக காத்திருந்த நிதியுதவி கிடைக்கப்பெறும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 22, 2022) நீண்டகாலமாக காத்திருந்த நிதியுதவி கிடைக்கப்பெறும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சவாலான சூழல் மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தால் முன்பைக் காட்டிலும் பலமாக எதிர்கொள்ள தயாராகுங்கள். பணியிடத்தில் கிடைக்கும் வாய்ப்பு உங்கள் நன்மதிப்பை உயர்த்தும். நீண்டகாலமாக காத்திருந்த நிதியுதவி கிடைக்கப்பெறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டுத்துணி

ரிஷபம்:

புதிய நபர் ஒருவர் உங்களின் ஆர்வத்தை தூண்டுவார். சிறிய அளவில் அதை பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எதை தேர்வு செய்தீர்களோ, அது உங்களுக்கு பிடிக்காததைப் போன்ற எண்ணம் உருவாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

மிதுனம்:

உங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் புதியதொரு விஷயம் நடைபெற இருக்கிறது. பார்ட்னர்ஷிப் செய்ய ஒருவருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால், அதை விட்டுவிடுவது நல்லது. எல்லோருக்கும் கிடைத்திடாத பலன் மற்றும் வளம் உங்களுக்கு கிடைத்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கார்

கடகம்:

உங்களுக்கு நெருக்கமான நபர்கள் ரகசியத்தை காக்க மாட்டார்கள். உங்கள் கருத்துக்களை ஒத்த நபர்கள் மீது நம்பிக்கை வைக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்கவும். அரசியல் கட்சியினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பெரும் மாற்றம் காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோழி

சிம்மம்:

இன்றைய நாளில் சீரான ஆற்றல் கிடைக்கும். உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டிக் கொள்ள நேரம் கிடைக்கும். உங்களைப் போன்ற சிந்தனை கொண்ட நபரிடம் நீண்ட நேரம் விவாதிப்பீர்கள். எதையும் தீவிரமாக அணுகும் பழக்கத்தை சிறிது காலம் ஒத்தி வைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

கன்னி:

பழைய நண்பர் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறார். அவரை நம்பலாம். இன்றைய நாள் சற்று மந்தமானதாக இருக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் வைத்த வேலைகளால் இப்போது உங்கள் நேரம் வேகமாக நகருகிறது. மாலையில் பொழுதுபோக்குகள் இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செம்புக் கம்பி

துலாம்:

இப்போதெல்லாம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். தவறுகளுக்கு மற்றவர்களை பொறுப்பாக்குவது நல்ல பழக்கம் அல்ல. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் உருவாகக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற ரோஸ்

விருச்சிகம்:

எதையும் அளவுக்கு அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தால் அதன் விளைவுகள் தவறானதாக இருக்கும். சின்ன, சின்ன விஷயத்திற்கெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இயற்கையுடன் ஒன்றிணைந்து இருப்பது அல்லது தியானம் செய்வதன் மூலமாக அமைதி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேரை

தனுசு:

நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத ஒருவருடன் இப்போது நெருக்கம் ஏற்படக் கூடும். நண்பர்கள் மூலமாக நல்ல சௌகரியம் கிடைக்கும். உங்களை பணியமர்த்த விரும்பும் ஒருவர் உங்களை நேரடியாக அணுகக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளாண்ட்

மகரம்:

கடந்த சில நாட்களாக தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறீர்கள். இனியும் அது தொடரும். எதிர் பாலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். உங்கள் இலக்குகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு

கும்பம்:

நேர்மறை சிந்தனை மற்றும் நம்பிக்கை ஆகியவை அதிகரிக்க இருக்கிறது. எப்போதும் நேரத்தை தவற விடாதீர்கள். நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் மீது கவனமாக இருக்கவும். வீட்டுப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

மீனம்:

வழக்கமான பணிகளை ஒத்தி வைத்துவிட்டு, சிலவற்றின் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். தாயின் உடல்நலன் மீது கவனம் தேவை. உங்களைச் சுற்றியிலும் ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி

First published:

Tags: Oracle Speaks