ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 21, 2022) வாழ்க்கையில் வெற்றிக் கிடைக்கும் நாள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 21, 2022) வாழ்க்கையில் வெற்றிக் கிடைக்கும் நாள்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு வாழ்க்கையில் வெற்றிக் கிடைக்கும் நாள். கடந்த காலத்தில் நீங்கள் உழைத்த பலனைப் பெறக் கூடிய நல்ல நாளாக அமையும். முக்கியமான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணத்திட்டங்கள் தள்ளிப் போகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கருப்பு நிற ஸ்படிகம்

ரிஷபம்:

இன்றைக்கு உங்களுக்கு நல்ல நாளாக அமையும். ஒருவரின் புதிய திறன்களால் உங்கள் மனநிலையை உயர்த்துவதோடு இணக்கமான சூழலையும் உருவாக்கும். சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் சந்தித்த நபரால் பயனுள்ள அனுபவம் தோன்றும். உங்களிடம் உள்ள நல்ல ஆற்றலை பல்வேறு பணிகளுக்காக முயற்சித்துப் பாருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு களிமண் பெட்டி

மிதுனம் :

நல்ல தொடக்கத்திற்கான நாள் இன்று. உங்களுக்கான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடம் அதிகமாக எதிர்ப்பார்க்காதீர்கள். நிச்சயம் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் ஒருவருக்குக் கடன் கொடுத்திருந்தால் அல்லது கடன் வாங்கியிருந்தால் நிச்சயம் சிறிய சங்கடம் ஏற்படக்கூடும். நிதானமாக இருப்பது மன அமைதியைக் கொடுக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வசந்தம்.

கடகம்:

குழப்பமான மனநிலையை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நாள் இன்று. மற்றவர்கள் செய்யும் வேலையால் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் நெருங்கிய நண்பர் பகிரும் விஷயங்களை மதிக்கப் பழகுங்கள். ரகசியம் காப்பது பிரச்சனைக்குத் தீர்வு தரும். இன்றைக்கு ஏதாவது நிகழ்ச்சி அல்லது விழாக்களில் கலந்துக் கொள்வதற்காக வெளியில் செல்ல நேரிடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூப்பந்து மைதானம்

சிம்மம்:

இன்றைய நாள் உங்களின் நண்பர்களுக்கு உரித்தானது. நண்பர்களின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் நீங்கள் செய்வீர்கள்.. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்திருந்தால், அதற்கான வெகுமதிகளைப் பெறக்கூடிய நல்ல நாள் இன்று. நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகளை நீங்கள் அடைவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அட்டை பெட்டி

கன்னி:

இன்றைய நாளில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் நல்ல காரியங்கள் நடக்கும். சில விஷயங்களுக்காக நீண்ட நாள்கள் காத்திருக்கலாம். இது உங்களின் கடந்த கால செயல்களின் பலன்களைப் பெறுவதற்கான நாளாக அமையும். சிக்கலில் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் நல்ல யோசனை வேண்டி உங்களைத் தேடி வரக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு படிகம்

துலாம்:

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நீண்ட கால குழப்பத்திற்குத் தீர்வு காண்பீர்கள். மன அமைதியைப் பெறுவீர்கள். உங்களது வேலைகளைப் பற்றி நல்ல செய்திகள் விரைவில் வரக்கூடும் என்பதால் உற்சாகமான மனநிலை ஏற்படக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு ஊசி

விருச்சிகம்:

நீண்ட நாள்களாக எதிர்ப்பார்த்திருந்த ஒன்று நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் புதிய நபருடன் நட்பு ஏற்படும். அவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது உங்களுக்கு நன்மையளிக்கும்

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காத்தாடி

தனுசு:

வாழ்க்கையில் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். சில நாள்களாக ஏற்பட்டிருந்த கவனக்குறைவு உங்களை விட்டு நீங்கும். நீங்கள் ஈடுபடும் ஆராய்ச்சிகள் அல்லது பணிகளில் உறுதியான முடிகளை எடுப்பீர்கள். முற்போக்கான கல்விப் பயணத்தைத் தேர்வு செய்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தலையணை

மகரம்:

இன்று நீங்கள் உற்சாகத்துடன் இருக்கும் நாள். நீங்கள் செய்யும் வேலைகளால் பாராட்டினைப் பெறுவீர்கள். இனி வரும் காலங்களில் நீங்கள் செய்யக்கூடிய பணி புதிய அர்த்தத்தை ஏற்படுத்தும். உங்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு நம்பிக்கையுடன் இருக்கும் நாளாக அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மருந்தகம்

கும்பம்:

இன்றைக்கு அதிக செலவு ஏற்படும் நாள். உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் திரும்பிப்பார்க்கும் சூழல் ஏற்படும். நெருங்கிய நண்பரின் நிறுவனத்தைக் கவனிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதற்காக சில பயணங்களைக்கூட மேற்கொள்ள நேரிடும். உங்களின் சில முதலீட்டுகளுக்காக அதிக நிதியை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பலகை

மீனம்:

இன்றைக்கு பண விஷயங்களில் சில தடைகள் ஏற்படும் நாளாக அமையும். நிதானத்துடன் இருந்துக் கொள்ளுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். சமூக ஈடுபாடுகளில் ஈடுபடுவது போன்ற உணர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கையில் பல பொழுதுபோக்கு வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வானவில் ஸ்படிகம்

First published:

Tags: Oracle Speaks