ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர்களுக்கு இன்று (அக்.2) திருமண முயற்சி கைகூடும் நாளாக இருக்கும் ; நல்ல வரன் வரும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர்களுக்கு இன்று (அக்.2) திருமண முயற்சி கைகூடும் நாளாக இருக்கும் ; நல்ல வரன் வரும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு நீங்கள் என்ன செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடக்காது. சிலரின் கவனத்தை ஈர்க்க நீங்கள் புதிய உத்திகளை கையாள வேண்டும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள் தவறான புரிதலை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். பழைய நண்பர் தொடர்பான செய்தி உங்களை வருந்த வைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தந்தம்

ரிஷபம்:

பிறர் நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று நினைப்பவர்கள் உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். உணர்வுகளை உங்கள் எண்ண வெளிப்பாடுகள் சில சமயம் முந்திச் செல்லலாம். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பிறருக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அறிகுறி

மிதுனம்:

யாரேனும் நபரை பின்பற்ற விரும்புகிறீர்கள் அல்லது வளர்ச்சிக்கான வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உண்மையான முயற்சி தேவை. இனி வரும் நாட்களில் உங்கள் பணிகளை முடிப்பதற்கு சாதகமான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கை துணை முன்வைக்கும் ஆலோசனை உதவிகரமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காவி

கடகம்:

புதிய சிந்தனைகளை குவிதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், இப்போதைய சூழல் திசையற்றதாக தோன்றும். தொழில்துறையைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். காதல் உறவில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் துணையுடன் நேரம் செலவழிக்கவும். உங்கள் பார்ட்னர் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கட்டுரை

சிம்மம்:

பிறர் மீது நெருக்கடி கொடுக்கும் உத்திகள் வேலைக்கு ஆகாது. உங்களை சுற்றியுள்ள சிலரை நீங்கள் தொந்தரவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நோக்கம் தெளிவானதாக இருந்தாலும் பேசும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மசாலா வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்காசு

கன்னி:

கடந்த காலத்தின் வலுவான நினைவுகள் உங்களின் புதிய கண்ணோட்டத்தை தீர்மானிக்கும். செய்த தவறையே மீண்டும் செய்யாமல் இருக்க நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உடனடி கவலை சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால், அதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

துலாம்:

உங்கள் உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய நண்பர் மூலமாக உங்களின் திறன்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும். உங்கள் விருப்பத்திற்கு தகுந்த புதிய வாய்ப்பு ஒன்றை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு கார்

விருச்சிகம்:

அவசரத்தில் எடுத்த அனைத்த முடிவுகளும் தவறாய் முடிந்துள்ளது என்பதை நீங்கள் வெகு விரைவாக அல்லது தாமதமாக புரிந்து கொள்வீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற விஷயங்கள் நடப்பதாக உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். பிறரும் கூட அதனை ஏற்றுக் கொள்வார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்தமான இனிப்பு

தனுசு:

உங்கள் உறவை தக்க வைக்க கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த சின்ன, சின்ன நடவடிக்கைகள் என்பது இப்போதைய துயர் மிகுந்த காலத்தில் கை கொடுப்பதாக அமையும். பணிச்சுமை இருந்தாலும், அவற்றை நீங்கள் சமாளிக்கக் கூடும். பலகட்ட இறுதிக்கெடு காரணமாக நீங்கள் சோர்வடைவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள்ளரங்கு செடி

மகரம்:

நீங்கள் திட்டமிடும் செயலை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக சிறப்பான தருணம் இது. வணிகத்தில் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண வரன் வாய்ப்பு வரும். அது சுமூகமாக இருக்கும். உங்கள் மனம் தெளிவானதாக இருக்கிறது. நண்பர்களுடன் மேற்கொள்ளும் திட்டங்கள் சிக்கலை தரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

கும்பம்:

மேம்பட்ட கல்வி கற்கும் உங்களின் முயற்சியில் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கான உதவி தேடி வரும். வெளியூரில் வசிப்பவர்களுக்கு வீட்டு நினைவாகவே இருக்கும். ஆனால், அது தற்காலிகமானது. தாயின் ஆரோக்கியம் தொடர்பாக உங்கள் மனதில் வெறுப்பு உண்டாகக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் கல்

மீனம்:

புதிய வேலை தொடர்பாக நண்பர் மூலமாக நல்ல பரிந்துரை வந்து சேரும். உங்கள் பணியின் மீது கவனம் செலுத்துவது நல்ல பலனை தரும். உங்களைச் சுற்றியுள்ள சிலர், உங்கள் குறித்து ஏற்படுத்தும் தவறான பிம்பம் காரணமாக உங்கள் மனம் புண்படக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நேப்கின் ஹோல்டர்

Published by:Anupriyam K
First published:

Tags: Astrology, Oracle Speaks, Rasi Palan