ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர்களுக்கு இன்று (1 அக்டோபர் 2022) ஒரு புதிய வருமான ஆதாரம் வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர்களுக்கு இன்று (1 அக்டோபர் 2022) ஒரு புதிய வருமான ஆதாரம் வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் உங்கள் ஆற்றல்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். மிகவும் பரபரப்பான நாளாக அமையும். வேலைகளில் அழுத்தம் அதிகரிக்க கூடும், ஆனால் விரைவில் நிலைமை சீராகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓபல் எனப்படும் ஒருவகை மாணிக்கக்கல்

ரிஷபம்:

இன்று உங்கள் ப்ரோகோயத்தின் மீது அக்கறை காட்ட வேண்டிய நாள். உடல் நலம் சரியில்லாமல் போனால் மருத்துவ சிகிச்சையில் சில நாட்களை செலவிட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து ஆரோக்கிய உணவு மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டிய தருணம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விலையுயர்ந்த நீல ரத்தின கல்

மிதுனம்:

இன்று மிகுந்த ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் நாள் முழுவதும் இருப்பீர்கள். உங்களை தேடி வரும் புதுமையான திட்டங்களில் தயக்கமின்றி பணியாற்றுங்கள். உடனடி வெற்றியை உங்களை நோக்கி வரும். உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் இன்று கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டூர்மலைன்

கடகம்:

உங்கள் வாழ்க்கையில் அறிமுகமான ஒரு புதிய நண்பர் உங்களை விட்டு இன்று விலகி செல்லலாம். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். சில வெளி நபர்கள் உங்கள் நாளில் குறுக்கிடுவது உங்களை மிகவும் எரிச்சலடைய செய்யலாம். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கின் நிழல்

சிம்மம்:

இன்று புதிதாக எந்த விஷயங்களையும் முயற்சி செய்து பார்க்காதீர்கள். அப்படி செய்தால் இன்றைய நாள் உங்களுக்கு துன்பமாக முடியலாம். உங்களை சுற்றியுள்ள விஷயங்களை கூர்ந்து கவனிப்பது உங்களுடன் பிறர் தொடர்பு கொள்ள ஏதுவாக அமையும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் அனுகூலத்தைப் பெற வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முத்திரையிடப்பட்ட பெட்டி

கன்னி:

இன்றைய நாள் ஆக்கப்பூர்வமாக இருக்கவும், நல்ல முன்னேற்றம் பெற முதலில் உங்கள் மனம் தெளிவாக மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் துணைக்கு இன்று உங்களிடமிருந்து அதிக கவனம் தேவைப்படலாம். ஒரு புதிய வருமான ஆதாரம் இன்று உங்களை வந்து சேர கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

துலாம்:

பணியிடத்தில் சில தீவிரமான பிரச்சனைகளுக்கு உங்களது கவனம் தேவை. போதுமான அளவு ஓய்வெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் இன்றைய நாள் முழுவதும் அமைதி இல்லாமல் இருப்பீர்கள். நீண்ட நாட்களுக்கு முன் சந்தித்த சில நண்பர்களை இன்று மாலை சந்தித்து மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அணில்

விருச்சிகம்:

இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நாளின் துவக்கத்திலேயே சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நேரம் விரயமாவதை தவிர்க்கலாம். புதிய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி திறமைக்கான அங்கீகாரம் மற்றும் வெகுமதி பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி

தனுசு:

நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதகமான விஷயத்தை பற்றிய தகவல் கிடைக்கும். இதனால் உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தினர் உங்களை கலந்து ஆலோசிக்காமல் இருக்கலாம். எனினும் வருத்தம் கொள்ள தேவையில்லை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு ஆடை

மகரம்:

நீங்கள் எப்போது தவறு செய்வீர்கள் என்று பலர் காத்திருக்கிறார்கள் என்பதால் செய்யும் வேலைகளில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு பயனுள்ள சில விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் கற்று கொள்ளப்போகும் புதிய திறமை மூலம் எதிர்காலத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விலைமதிப்பற்ற ரத்தினகல்

கும்பம்:

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்தில் ஆகி வரும் தாமதத்திற்கு உங்களது சில கடந்தகால செயல்கள் காரணமாக இருக்கலாம். எனவே எந்த இடத்தில தவறு செய்தோம் என்று சிந்தித்து முடிந்தால் அதை சரி செய்வது உங்களை முன்னோக்கி நகர்த்தும். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை அவென்டுரின்

மீனம்:

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சரியான நாள். உங்கள் கடந்தகால சாதனைகள் பற்றி மட்டுமே சிந்திக்காமல் நிகழ்காலத்தில் சாதிக்க எண்ணம் கொள்ளுங்கள். சிறிய அளவிலான மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகத கல்

Published by:Lakshmanan G
First published: