ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 9, 2022) புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 9, 2022) புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு இன்று பல கவனச்சிதறல்கள் இருக்க கூடும். ஒரு புதிய வேலை வாய்ப்புக்கான ஆலோசனை உங்களது நெருங்கிய குடும்ப நண்பர் மூலம் கிடைக்கலாம். சில புதிய நபர்கள் உங்களைப் பற்றி தேவையற்ற கருத்தை பரப்பலாம். எனவே எச்சரிக்கை தேவை. ஒரு சிறிய பயணம் உங்களுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

ரிஷபம்:

நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிதி உதவி இன்று உங்களுக்கு கிடைக்கலாம். நீங்கள் குடும்பத்தினரை விட்டு வெகு தொலைவில் இருந்தால், குடும்ப உறுப்பினர்களின் நினைவுகளால் இன்றைய பொழுது கழியும். நாளை உற்சாகமாக்க காலை எழுந்தவுடன் ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் சைன்

மிதுனம்:

உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை இன்று பெறுவீர்கள். உங்களது புதிய யோசனைகள் பணியிடம் அல்லது வியாபாரத்தில் நல்ல வரவேற்பை பெறும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியை ருசிக்கும் வாய்ப்புகள் இன்று அதிகம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சலூன்

கடகம்:

இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பாக சென்றாலும், வேலைகள் அதிகம் இருந்தாலும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி விடுவீர்கள். நீங்கள் ஏதாவது சட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், உங்களது ஆதாரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை இன்று உறுதி செய்து கொள்ளுங்கள். உறவுகளை நீட்டிக்க நீங்கள் முன்பு செய்த முயற்சிக்கான பலன்கள் இன்று கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பழமை வாய்ந்த பொருள்

சிம்மம்:

உங்கள் உறுதியான விருப்பத்தை இன்று மற்றவர்களும் ஒப்பு கொள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் அவசரத்தில் தேர்வு செய்த விஷயங்கள் மோசமான விளைவை கொடுக்காது என்பதை நீங்கள் உணர்வீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்வர் காயின்

கன்னி:

உங்களது ஸ்கில் சப்போர்ட்டை உடன்பிறந்தவர் அல்லது உங்கள் நெருங்கிய நண்பர் இன்று சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். உங்கள் ஆர்வத்துடன் ஒத்து போக கூடிய வாய்ப்புக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் ஆளுமையில் தேவைப்படும் மாற்றம் ஒருவரால் சுட்டிக்காட்டப்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டம்

துலாம்:

பொருளாதார நிலை பின்னடைவை சந்தித்துள்ளது குறித்த கவலை இன்று நீங்கும். இன்று உங்களது நிதி நிலைமை பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பும். விஷயங்கள் எதுவாக இருந்தாலும் கடந்த காலத்தில் நீங்கள் செய்த சில தவறுகளை மீண்டும் செய்யாமல் கவனமாக இருக்க நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல நிற கார்

விருச்சிகம்:

உங்கள் நோக்கம் தெளிவாக இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை பெற நீங்கள் தொடர்பு கொள்ளும் முறையில் கண்டிப்பாக மாற்றங்கள் தேவை. நீங்கள் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த சில யுக்திகள் இனி எதிர்ப்பார்த்த பலன்களை தராது. கடந்த சில வாரங்களாக நஷ்டத்தில் இருந்த வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உங்களுக்கு பிடித்த இனிப்பு

தனுசு:

இன்று நீங்கள் உங்களது தொழில் அல்லது வேலை சார்ந்த சீனியர் ஒருவரை சந்திக்க நேரிடலாம், அவருடைய ஆலோசனை உங்களது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். காதலிப்பவர் என்றால் உங்களது பார்ட்னருடன் இன்று சிலமணி நேரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். மனதில் தோன்றும் புதிய எண்ணங்கள் நிலையானதாக இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்

மகரம்:

உங்களது நீண்ட கால இலக்குகளை அடைய திட்டமிட்டால் அதற்கேற்ற உண்மையான முயற்சி மற்றும் உழைப்பு இன்று தேவைப்படுகிறது. இன்று நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், நட்புணர்வுடனும் காணப்படுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

கும்பம்:

நீங்கள் மனதில் நினைக்கும் விஷயங்களை சம்பந்தப்பட்டவரிடம் தெரிவிப்பது முக்கியம். இல்லை என்றால் இந்த நாள் உங்களுக்கு மிகவும் மந்தமாக மற்றும் குழப்பத்துடன் நகரும். புதிய வேலைவாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதிர்ஷ்டவசமாக சுவாரஸ்யமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் கல்

மீனம்:

இன்று நீங்கள் என்ன தான் ஆற்றலுடன் செயல்பட்டாலும் நினைத்த வேலைகள் அல்லது இலக்குகளை முடிக்க முடியாமல் போகலாம். இன்றைய தினம் திட்டமிடப்படாத நிறைய வேலைகள் இருக்கும். பிறருடனான தகவல் தொடர்ப்பின் போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கப் ஹோல்டர்

First published:

Tags: Oracle Speaks, Tamil News