ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 8, 2022) அலுவலகத்தில் நீடித்து வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 8, 2022) அலுவலகத்தில் நீடித்து வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என நீங்கள் காத்திருந்தால், அதற்கான சரியான நேரம் இப்போது அமைந்துள்ளது. இன்பம், துன்பம் என கலவையான உணர்ச்சிகளுடன் இன்றைய நாள் நகரக்கூடும். முக்கியமான வேலைகளை காலை நேரத்தில் செய்வது சிறந்தது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நட்சத்திரம்

ரிஷபம்:

சுற்றியிருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ள முயற்சித்தாலும், நீங்கள் புரியாத புதிராக இருந்து மற்றவர்களை குழப்பி வருகிறீர்கள். உங்களுக்கு சாதகமான வகையில் ஒருவரைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் நீங்கள் வல்லவர். வேண்டாம் என ஒதுக்கிய பழைய வாய்ப்பு ஒன்றைப் பற்றி இப்போது நீங்கள் மறுபரிசீலனை செய்வது நன்மைப் பயக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பீங்கான் தோட்டம்

மிதுனம்:

உங்களுக்கு நெருக்கமானவர்கள் சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம், ஆனால் அது மிகவும் சாதாரணமானது. மற்ற நபரின் நிலைமை மற்றும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும் முக்கியம். உங்களுடைய தனித்திறமை, பலம், பலவீனம் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள முயன்று வருகிறீர்கள், அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நைட்டிங்கேல் பறவை

கடகம்:

“கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை’ என்பார்கள். அதுபோல் நீங்கள் தெரிந்த நபர்களிடம் கடன் அல்லது கைமாத்து வாங்கியிருந்தால், அவர்களுடனான உறவில் விரிசல் விழ வைப்புள்ளது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல்கள் காரணமாக நிகழ்காலத்தை கொஞ்சம், கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறீர்கள். பெற்றோர் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அட்டை பெட்டிகள்

சிம்மம்:

உங்களுக்கு சீனியர்களுடனான தொடர்பு முன்பை விட இப்போது சிறப்பான அளவில் முன்னேறி வருகிறது. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் குணமும் முன்பை விட இப்போது நன்றாக மாறியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கம்பளிப்பூச்சி

கன்னி:

உங்களிடம் முழுமை அடையாமல் உள்ள திறமைகளை வளர்ந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நெருங்கிய நண்பர்கள் மூலமாக சர்ப்ரைஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு விஷயத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஜெம் ஸ்டோன்

துலாம்:

சில சமயங்களில் உள்ளுணர்வு சொல்வதை புரிந்து கொள்ளாமல் பிறரை தவறாக பேச நேரலாம். அதன் பின்னர் தவறை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் அவதியுறுவீர்கள். உங்களுக்கான ஆதாரங்களை சரியாக பயன்படுத்தி வந்தால், அது எதிர்கால முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காஸ்ட் அயன் தவா

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த நெருக்கமான நண்பரை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது. மனதில் ஏற்பட்ட காயங்களை நம்பகமான நபருடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக ஆறுதல் அடையலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பூங்கா

தனுசு:

இன்றைய தினம் பிரகாசமாகவும், உங்களுக்கு சாதகமாகவும் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள அல்லது மறந்து போய் நீண்ட காலமாக செய்யாமல் வைத்துள்ள வேலைகளை முடிக்க தொடங்கலாம். வீட்டு பொறுப்புகள் முக்கியத்துவம் பெறலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சாமந்தி மலர்

மகரம்:

உங்கள் தலைமையின் கீழ் பணியாற்றும் நபர் ஒருவர், பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவித்தால், உடனடியாக அதனை தீர்த்து வைக்கவும். பங்குச்சந்தையில் கரடி மற்றும் காளையை பற்றி நன்கு அறிந்த நபருக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பிசினஸ் சம்பந்தமான மீட்டிங்கில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் லைட்

கும்பம்:

காதல் அல்லது திருமண உறவில் தூரமாக பிரிந்திருக்கும் ஜோடிகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வரக்கூடும், ஆனால் இது தற்காலிகமானது மட்டுமே. வழக்கத்தை விட வேலை சம்பந்தமான மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள பிடித்தமான இசையை கேட்பது நல்லது. கொஞ்ச நாட்களுக்கு சிறிய அளவிலான பயணம் சென்று வர திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரெட்ரோ இசை

மீனம்:

நண்பர்கள் அல்லது அலுவலக சகாக்களுடன் இணைந்து சுற்றுலா, பார்ட்டி அல்லது வேறு ஏதாவது விஷயத்திற்கு திட்டமிட்டிருந்தால் அதனை செயல்படுத்த தற்போது சரியான நேரம். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி கதவு

First published:

Tags: Oracle Speaks, Tamil News