ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 7, 2022) நினைத்த காரியங்கள் நிறைவேறும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 7, 2022) நினைத்த காரியங்கள் நிறைவேறும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறக்கூடும். உங்களது பணியிடத்தில் உங்களின் வேலையைப் பாராட்டும் நிலை ஏற்படும். புதிய முயற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் உங்களது வேலையை விரைவில் முடிக்க உதவும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய கட்டிடக்கலை

ரிஷபம்:

பணியிடத்தில் பேசப்படும் கிசுகிசுக்களால் மன நிம்மதியை இழப்பீர்கள். பிடிக்காத நபர்களிடமிருந்து விலகியே இருந்துக் கொள்ளுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனம் என்ன சொல்கிறதோ? அதை மட்டும் கேளுங்கள். மன அமைதிக்கு தியானம் மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜேட் செடி

மிதுனம்:

இன்றைக்கு எதிர்பாராதவிதமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்களது பேச்சுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் உடன்படவில்லை என்றால் ஒரு கட்டத்திற்கு மேல் வற்புறுத்த வேண்டும். நீங்கள் திட்டமிட்ட பணிகளை விரைவாக செய்து முடிக்க நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய மொட்டை மாடி

கடகம்:

உங்களது சக்திக்கு மேலான ஒன்றை நீங்கள் இலக்காக செயல்படுவீர்கள். உங்களின் தொழில்துறைச் சார்ந்த மூத்தவர்களால் தகுந்த ஆலோசனைப் பெற்று முன்னேற்றம் காண்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஒளி கோபுரம்

சிம்மம் :

இன்றைக்கு சவாலான நாளாக அமையக்கூடும். உங்களின் வேலைக்கான பணம் செய்ய நேரிடும். நீங்கள் வீட்டில் சில சவால்களை சந்திக்க நேரிடும். நிதானமாக செயல்படுங்கள். வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி ஜாடிகள்

கன்னி:

இன்றைக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகம் ஏற்படும். முதலீடுகளில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து யாராவது உங்களிடம் ஆலோசனைக் கேட்க வந்தால் நீங்கள் அதைத் தவிர்க்காதீர்கள். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவிடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காபி குவளை

துலாம்:

வாழ்க்கையில் வரக்கூடிய புதிய நட்புகளால் பிரச்சனையை சந்திப்பீர்கள். மாணவர்கள் ஆன்லைன் கோர்ஸ் அல்லது டுடோரியல் மூலம் படிக்கும் நிலை உருவாகும். இது உங்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

விருச்சிகம்:

பல எதிர்பாராத கட்டுப்பாடுகள் உங்கள் வேலையின் வேகத்தைத் தடை செய்யக்கூடும். நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

தனுசு:

இன்றைய நாளில் எந்த விஷயத்திலும் தாமதம் வேண்டும். நீங்கள் நாளை செய்யலாம் என தள்ளிப்போடுவதை நிறுத்திவிட்டு முன்கூட்டியே செய்துவிடுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை. நெருங்கிய நண்பர்களிடமிருந்து சாதகமான செய்திகளை இந்நாளில் பெறக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சோலார் பேனல்

மகரம்:

இன்றைக்கு நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ஆச்சரியப்படும் அளவிற்கு சர்வதேச வாய்ப்புகளால் நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த பணிகளுக்கான ஒப்புதல் கிடைக்கும் நாள் இன்று. உடல் நலத்துடன் இருக்க வேண்டும். சில உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும் விரைவில் தீர்க்க நேரிடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மலர் குவளை

கும்பம்:

இன்றைக்கு நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். நீங்கள் சொந்த வாழ்க்கை அல்லது பணியிடத்தில் சுவாரஸ்சியமான ஒருவரை சந்திக்கும் சூழல் ஏற்படும். மன அமைதியைக் கொடுக்கும். முன்பை விட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் விலை மதிப்பற்ற ஒன்றை நீங்கள இழக்க நேரிடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

மீனம்:

இன்றைக்கு பணவரவு சீராக இருக்கும். உங்களது தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறிய மற்றும் பெரிய பணிகளாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல பலனை அடைவீர்கள். எதற்கும் பதற்றம் வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் பணியாற்றினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இல்லையென்றால் கொஞ்சம் பணியில் பின்னோக்கி செல்ல நேரிடும். வார இறுதியில் பண வரவு உங்களுக்கு கைக் கொடுக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News