ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 6, 2022) வெளிநாட்டில் பணி செய்ய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 6, 2022) வெளிநாட்டில் பணி செய்ய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு இப்போது மிகுந்த மனக்குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கு விடை உங்களுக்கு அருகாமையிலேயே இருக்கிறது. புதிய வேலை தேடும்போது உங்களுக்கான பொறுப்பு என்ன என்பதை தெளிவாக தேர்வு செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து

ரிஷபம்:

நிதி சார்ந்த சிக்கலை தீர்க்க நீங்கள் இதுவரையிலும் கவனம் செலுத்தவில்லை என்றால், விரைவாக அதை செய்து முடிக்கவும். புதிய நபர் ஒருவர் உங்கள் கவனத்தை திசை திருப்பக் கூடும். பயணத்திற்கான உங்கள் திட்டத்தை ஒத்திவைக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஊதா ரிப்பன்

மிதுனம்:

உங்கள் வாழ்க்கையின் முந்தைய அனுபவங்கள் மீண்டும் வர இருக்கின்றன. உங்கள் திறமைகளை மெழுகேற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது. சாதாரண இலக்குகள் கூட கடினமாக தோன்றாலும். ஆனால், திறனை மேம்படுத்திக் கொண்டால் அவை எளிமையாகிவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஷோஃபா செட்

கடகம்:

நீங்கள் துரிதமாக செயல்படாவிட்டால் வாழ்க்கையில் துன்பம் வந்து சேரும். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலமாக உங்களுக்கு நேரம் மிச்சமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்னேலியன்

சிம்மம்:

உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படக் கூடிய நபராக நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு சரியான பொருத்தமாக அமைந்துள்ளார். எந்தவொரு விஷயத்தையும் விதிகளின்படி செய்ய நினைத்தால் தாமதம் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்கச்சங்கிலி

கன்னி:

புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்கள் மூலமாக உங்களுக்கான சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும். முதலீடுகள் அனைத்தையும் சாதூர்யமாக செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புகழ் வாய்ந்த நபர்

துலாம்:

அதிகபட்ச லாபம், வாய்ப்புகள் மற்றும் சாதகங்களை பெறுவதற்கான நாள் இதுவாகும். புதிய மக்களுடன் பந்தம் ஏற்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக அமையும். பழைய தொடர்புகள் மூலமாக உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் பாட்டில்

விருச்சிகம்:

உங்களை வெற்றி கொள்ள நினைக்கும் நபர்களுக்கு மறைமுக நோக்கங்கள் இருக்கலாம். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பிட்ட நிகழ்வுக்குப் பிறகு நீங்கள் நம்பிக்கை இழந்தால், அதை திரும்பப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரத்தினக்கல்

தனுசு:

சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் உங்களை மாற்றிக் கொள்வதற்கான தருணம் இது. காதல் வாய்ப்பு என்று வருவதற்கான பலமான வாய்ப்பு தென்படுகிறது. இனி உங்கள் கனவுகளை நிறைவேற்றுபவராக அந்த நபர் இருக்கக் கூடும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்லலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய விளக்கு

மகரம்:

தொடக்கத்தில் பிரச்சனை மிகுந்ததாகக் காணப்படும் எந்தவொரு விஷயத்திற்கும் வெகுவிரைவில் தீர்வு கிடைக்கும். உங்கள் பணியை வெளிநபர் ஒருவர் எடைபோட்டு கொண்டிருக்கிறார். விரைவில் இதிலிருந்து வெளிவருவீர்கள். கல்வியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பச்சை நிற மெழுகுவர்த்தி

கும்பம்:

குடும்பத்தில் உள்ள சில நபர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை உங்கள் மனதில் நிறைந்திருக்கும். நீங்கள் உயரத்திற்கு செல்வதைப் பார்த்து சக ஊழியர் உங்கள் மீது பொறாமை கொள்வார். புதிய சிந்தனைகள் வடிவம் பெறத் தொடங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மீன் தொட்டி

மீனம்:

சக ஊழியர் ஒருவருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். அந்த பிரச்சனை முற்றி விட்டதால், அதற்கு உங்களால் இப்போது தீர்வு காண முடியாது. வெளிநாட்டில் பணி செய்ய அல்லது வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு புள்ளி

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News