ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 5, 2022) வேலை சம்பந்தமாக புதிய வாய்ப்புகள் உண்டாகக்கூடும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 5, 2022) வேலை சம்பந்தமாக புதிய வாய்ப்புகள் உண்டாகக்கூடும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு இன்றைய நாள் மந்தமாக இருக்கலாம், எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் சோம்பேறித்தனமாக உணரலாம். இதனால் சில வேலைகளை நீங்கள் ஒத்திவைக்கக்கூடும். இன்றைய தினம் உங்களுடைய ஆற்றல் திசை திருப்பப்பட்டதாக உணரலாம். எனவே தேவையற்ற கவலைகளைப் போக்க சிறிய அளவிலான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆல்பம்

ரிஷபம்:

விலைமதிப்பற்ற உறவை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்காக நேரம், உழைப்பு ஆகியவற்றை செலவிட வேண்டியிருக்கும். இதனை உங்கள் லைஃப் பார்ட்டனர் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கலாம். . உங்கள் காலை நேரத்தை அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பழைய மோட்டார் சைக்கிள்

மிதுனம்:

பணியிடத்தில் உங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்ள புதிதாக ஒருவர் வரலாம், இது உங்கள் முன்னேற்றத்திற்கான நல்ல செய்தியாகவே அமையும். எனவே நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் வரும் ஒரு அழைப்பு, உங்களை ஓவர் டைம் வேலை செய்வதில் இருந்து காப்பாற்றும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கீசெயின்

கடகம்:

இன்றைய தினம் சற்று பரபரப்பாக இருக்கும் என்றாலும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க மறக்காதீர்கள். ஏனெனில் அதுதான் உங்களை ரீலாக்ஸாக வைத்திருக்க உதவும். புதிதாக ஒரு விளையாட்டு மீது ஆர்வம் பிறக்கலாம். அலுவலக பணியாளர்களுக்கு தலைமைப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு பவளம்

சிம்மம்:

கடந்த காலத்தில் யார் மனதையாவது நீங்கள் காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோரவும், சமாதானப்படுத்தவும் சாதகமான சூழ்நிலை இன்று நிலவுகிறது. கல்லூரி நண்பர்கள் சந்தித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இன்று அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வானவில்

கன்னி:

புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். வேலை தேடி அலைந்து வந்தவர்களுக்கு, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வீடு தேடி வர வாய்ப்புள்ளது. காலை முதல் பரபரப்பாக இருந்தாலும், நாளின் கடைசியில் உங்களுக்கு என யாருமே இல்லாதது போல், தனிமையும், வெறுமையும் நீங்கள் உணரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - காபி ஷாப்

துலாம்:

ஒரு சின்ன பிரச்சனையால் வீட்டின் அமைதியான சூழ்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எந்தவித திட்டமிடலும் இன்றி புதிதாக சில கூடுதல் வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். ஒரு புதிய பொழுதுபோக்கு உங்களுடைய கவனத்தை ஈர்க்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி பாட்டில்

விருச்சிகம்:

வேலையில் மாறி வரும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இப்போது முழு ஈடுபட்டுடன் வேலை பார்த்து எதிர்காலத்தில் வெகுமதியாக மாற வாய்ப்புள்ளது. அக்கப்பத்தினரால் சில குழப்பங்கள் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பேட்டரி செட்

தனுசு:

எல்லாம் நன்மைக்கே என்பது போல், எதாவது புதிய செய்தி பற்றி கேள்விப்பட்டால் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுங்கள். ஏனெனில் இன்று கெட்ட விஷயமாக படுவது, நாளை நல்ல விஷயமாக மாறக்கூடும். இன்றைய தினம் திட்டமிடப்படாத நிறைய வேலைகள் இருக்கும் என்பதால், கொஞ்சம் வேகமாக பணியாற்றுவது நல்லது. வேலையில் இருக்கும் போதே பணியில் இருந்து விரைவாக ஓய்வு பெற நீங்கள் திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிடித்தமான பழைய நாவல்

மகரம்:

புதிதாக வரும் நபரை பார்ட்னர்ஷிப்பில் இணைத்துக்கொள்ள நீங்கள் தயாராகலாம், அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி நன்கு விசாரித்து அறிந்து கொள்வது நல்லது. சக ஊழியர் எதிர்பார்த்தது போல் இல்லாமல், வேலையில் உங்களுக்கு ஒத்துழைக்காமல் போகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செப்பு கண்ணாடி

கும்பம்:

அதிகம் ஆராயாமல் மனதில் தோன்றும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் இன்றைய தினம் உங்களுக்கு எளிமையான நாளாக அமையும். இன்று சற்றே சோம்பலாக இருப்பது போல் தோன்றும், இருப்பினும் சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் சுறுசுறுப்படைவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தானிய கிண்ணம்

மீனம்:

நெருங்கிய நண்பருக்கு அவரது குடும்ப விஷயங்களில் உங்களுடைய உதவி தேவைப்படலாம். சக ஊழியர்கள் பற்றி பொது இடத்திலோ அல்லது பிறரிடமோ விமர்சிப்பதை தவிர்க்கவும். கடந்த கால சேமிப்புகள் இப்போது கஷ்டத்தில் கைகொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிரிஸ்டல் ஜாடி

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks