ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 4, 2022) பணியிடத்தில் நல்ல பெயர் எடுக்கும் சூழல் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 4, 2022) பணியிடத்தில் நல்ல பெயர் எடுக்கும் சூழல் ஏற்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

குடும்பம் மற்றும் வேலை இரண்டையும் எப்படி சமாளிப்பது என்பது பற்றி நீங்கள் நீண்ட காலமாக சிந்தித்து வந்த விஷயத்திற்கு இப்போது சரியான வழியை கண்டுபிடித்திருப்பீர்கள். உங்களுடைய தலைமைப் பண்பை வளர்க்க, சீனியர் அல்லது குடும்பத்தில் மூத்த உறுப்பினர் உதவக்கூடும். நிறைய ஏமாற்றங்களை சந்தித்ததால் யார் மீதும் நம்பிக்கை வைக்கும் எண்ணம் இல்லாமல் போகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நகைச்சுவை

ரிஷபம்:

இன்று வழக்கமான வேலைகளைச் செய்ய ஏற்ற நாள். இன்றைய தினம் எதிர்பாராதவிதமாக கிடைக்கக்கூடிய நல்ல செய்தியானது உங்களை உற்சாகப்படுத்தக்கூடும். இன்று முதல் புதிய விளையாட்டு ஒன்றில் நீங்கள் ஆர்வத்துடன் பங்கேற்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பெருவாரியாக சேகரித்து வைக்கப்பட்ட பொருள்

மிதுனம்:

உடன்பிறந்தவர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தால், அதை மறந்து மன்னித்து கடந்து செல்ல வேண்டும். நீண்ட நாட்களாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்த விஷயங்களை கொட்டித்தீர்க்க இன்று வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நீண்ட நேர உரையாடல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். நீங்கள் சரியான நபர்களை நண்பர்களாக தேர்வு செய்வதில் கை நேர்ந்தவராக இருப்பீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிலிகான் அச்சு

கடகம்:

புதிய வாய்ப்பு அல்லது தேடி வந்த வேலையை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு இன்று முடிவு கிடைக்கும். உங்கள் சமூக அந்தஸ்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீல ரிப்பன்

சிம்மம்:

இன்று முழுநாளும் நீங்கள் உற்சாகத்துடன், ஆற்றல் நிறைந்தவராக காணப்படுவீர்கள். இதற்கு உங்கள் செவிகளை வந்தடைக்கூடிய ஒரு நல்ல செய்தி காரணமாக இருக்கலாம். அலுவலக ஊழியர்கள் பணியிடத்தில் சில போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிடித்த இனிப்பு வகை

கன்னி:

இன்றைய தினம் அனைத்து வேலைகளையும் ஒரே அடியாக செய்யமுடியாது என்பதால், வேலைகளை சிறிது, சிறிதாக பிரித்துக்கொள்வது நல்லது. மேலும் வேலையை முடிக்க யாரிடமாவது உதவிகோரலாம். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை சரியான தகவல் தொடர்பு மூலமாக பிறரை புரிந்து கொள்ள வைப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நினைவு பரிசு

துலாம்:

கடந்த காலத்தில் உங்களுக்கு நீங்களே செய்து கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற சரியான நேரம் இது. உடன்பிறந்தவர்கள் சில குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பழக்க வழக்கத்தை மாற்றிவிட்டதாக நீங்கள் கருதினாலும், சில பழைய விஷயங்கள் தொடர்வது போல் தோன்றலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செம்பு பாட்டில்

விருச்சிகம்:

உங்கள் கனவு அல்லது லட்சியத்திற்கான வேலைக்கு விண்ணப்பிக்க அதிர்ஷ்டமான நாள். முக்கியமான திட்டங்கள், தகவல்கள் குறித்து பலரிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்த வேண்டும், இல்லையெனில் அதில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - டெரகோட்டா கிண்ணம்

தனுசு:

உங்களைச் சுற்றியுள்ள சிலர் உங்களை தீய வழிகளில் வழிநடத்தக்கூடும், இருப்பினும் அவர்களுடான நெருக்கத்தை உங்களால் தவிர்க்க முடியாது. நீண்ட நேர நடைபயணம் அல்லது புதிய யுக்தி உங்கள் மூளையை குடைந்து கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண உதவலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிளாஸ் டாப் டேபிள்

மகரம்:

அவசர அவசரமாக தயார் ஆனதால் உங்களுடைய பிரசன்டேஷன் திருப்திகரமானதாக இல்லாமல் போக வாய்புள்ளது. மேலும் கடைசி நேர டென்ஷன் காரணமாக சில இடையூறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கவனத்துடன் எடுத்து செய்வது நல்லது. மன பதற்றத்தை தவிர்க்க தியானம் செய்யுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரூபிக்ஸ் கன சதுரம்

கும்பம்:

வாழ்க்கையில் கெட்ட கனவாக எண்ணி மறக்க நினைக்கும் விஷயங்கள் மீண்டும், மீண்டும் நினைவுக்கு வந்து துன்புறுத்தலாம். இருப்பினும், புதிய விஷயத்தை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகள் பலனளிக்கக்கூடும். நண்பர் ஒருவர் புதிய வேலை வாய்ப்பு குறித்து தெரிவிக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சாக்லேட்டுகள்

மீனம்:

இன்றைய தினம் நீங்கள் பொறுமையை இழக்க வாய்ப்புள்ளது. மழை கொட்டித்தீர்த்து வருகிறது, எனவே மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான தொலைபேசி அழைப்பு, மெயில் அல்லது கடிதத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தியே கிடைக்கும் என்பதால் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய வாகனம்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News