ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 15, 2022) பணியிடத்தில் உங்களது நிலைமை மேம்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 15, 2022) பணியிடத்தில் உங்களது நிலைமை மேம்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சில விஷயங்களை சமாளிப்பது சவாலாக இருக்கலாம். வணிகம் சார்ந்த புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். போட்டிகளை புறம்தள்ளி வைத்துவிட்டு, தற்போதைய வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி.

ரிஷபம்:

உங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உங்களின் பணித்திறன் குறைவதை சீனியர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். பணி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேன்கூடு.

மிதுனம்:

நீங்கள் கடினமாக உழைப்பவராக இருந்தாலும் கூட, உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் உங்கள் வார்த்தைகள் மீது மிகுந்த கவனம் தேவை. பொது இடத்தில் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சக ஊழியர் முயற்சி செய்வார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெண்கலம்.

கடகம்:

உங்கள் மனதில் கொண்டாட்டங்களை ஏற்படுத்தக்கூடிய நபர் ஒருவரை சந்திப்பீர்கள். எதார்த்தத்தை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் உங்களுக்கு தேவை. நீண்ட காலமாக நீங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய அல்லது பேசி வரக்கூடிய ஒருவர் மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டம்ளர்.

சிம்மம்:

உங்களை நீங்கள் இனிமையான நபராக மாற்றிக் கொள்ளுங்கள். குழுவினருடன் இணைந்து பணியாற்றி புத்துணர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் உங்கள் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கும். பண வரவை நிதானமாக கண்காணித்து நிர்வகிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிசய அடையாளம் - வாக்கிங் ஸ்டிக்.

கன்னி:

இரு நபர்கள் சந்தித்துக் கொள்ளும் சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதனை புறம்தள்ளி விடுங்கள். திட்டமிடாத நிலையில் சிறப்புக்குரிய நபர் ஒருவரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. குறுகிய பயணம் செய்ய நேரிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்.

துலாம்:

ஏதோ ஒரு விஷயம் குறித்து நீங்கள் உறுதியான தெளிவு இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால், அதனை இப்போது ஒத்திவைக்க வேண்டும். உங்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். புதிய ப்ராஜெக்ட் ஒன்றின் காரணமாக இனி வரும் நாட்களில் நீங்கள் பிஸியாக உணர்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்.

விருச்சிகம்:

அலுவலகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணி ஒன்றை முடித்து, நீங்கள் ஏற்றம் காண இருக்கிறீர்கள். குழு சந்திப்பு ஒன்று நடப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக அமையும். எதிர்கால தேவைக்கு இப்போது சேமிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூங்கில் செடி.

தனுசு:

கோபம் ஒருபோதும் எந்தவித பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது. ஆகவே, அதனை கட்டுப்படுத்த வேண்டும். சூதாட்டம் போன்ற அபாயம் மிகுந்த விஷயங்களை கைவிட வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான படிகம்

மகரம்:

குடும்பத்தில் ஒருவரது உடல் நலம் குறித்து கவலைகள் வரும். எதிர்பாராத பிரச்சினைகளை சமாளிக்க கடன் அல்லது சிலரது நிதி உதவி தீர்வாக அமையும். சில காலத்திற்கு நிதி நெருக்கடி நீடிக்கும். வாழ்க்கை துணையுடன் ஆலோசிப்பது பலன் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏணி.

கும்பம்:

சுற்றத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதை உங்களுக்கு கிடைக்காது. குறுகிய பயணம் செய்வதற்கான வாய்ப்பு உண்டு. வீட்டுக்கு வெளியே மகிழ்வான நேரத்தை செலவழிப்பீர்கள். வீடு திரும்பும் போது கவலைகளை விட்டுவிட்டு வரவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்க கல்.

மீனம்:

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இன்றைக்கு நீங்கள் செய்து முடிப்பீர்கள். இன்றைக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும். வீட்டில் உங்களுக்கான உதவிகள் கிடைக்கலாம். இந்த தருணத்தில் புதிய முதலீடு செய்வது நல்ல பலனை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயிலிறகு.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News