ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 12, 2022) உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய புதிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 12, 2022) உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய புதிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய காலைப்பொழுது மன அழுத்தம் நிறைந்ததாக இருந்தாலும், நாளின் முடிவுக்குள் சமநிலைக்கு திரும்புவீர்கள். புதிதாக சேர்ந்துள்ள வேலையில் முழு முயற்சியுடன் பணியாற்றுங்கள். உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அதிகாலை பனிமூட்டம்

ரிஷபம்:

‘என்னால் இதை செய்து முடிக்க முடியும்’ என வாக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள், இது உங்களை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் உணர வைக்கும். தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவது வேலையில் இருந்து உங்களை திசை திருப்பலாம். வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்திருந்தால் அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தலைப்பிரட்டை

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இன்று டைம் மேனேஜ்மெண்ட் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும், அதன் மூலம் தங்களது முக்கிய கடமைகளை காலக்கெடுக்குள் முடிக்க முடியும். உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய புதிய வாய்ப்பு விரைவில் கிடைக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நீரூற்று

கடகம்:

அலுவலக பணியாளர்கள் வேலைக்கான முன்னுரிமையை பட்டியலிட்டு பணியாற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு சக பணியாளர்களால் சிக்கல் வரலாம். திட்டமிடப்பட்ட பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால தள்ளிப்போகலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலர் அலங்காரம்

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இன்று, வழக்கத்தை விட அதிக உறுதியையும், ஆற்றலையும் உணருவீர்கள். தொழில், வியாபாரம் உள்ளிட்டவற்றில் புதிய விஷயங்களை முன்னேடுக்க சிறப்பான நாள். இன்று சர்ப்ரைஸ் கொடுப்பது உங்களுக்கு சரிவராது, எனவே எந்த விஷயத்தையும் சம்பந்தப்பட்ட நபருடன் முன்கூட்டியே கலந்தாலோசித்து திட்டமிட்டு செய்ய வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

கன்னி:

இன்றைய தினம் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு உள்ளுணர்வு சொல்வதை கேட்பது நல்லது. மீட்டிங் அல்லது கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றால் உங்களுடைய கருத்துக்களை தைரியமாக முன்வையுங்கள். வாடிக்கையாளர்களிடம் உங்களின் நம்பகத் தன்மை அதிகரிக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பைரைட் கிரிஸ்டல்

துலாம்:

இன்றைய தினம் பரபரப்பாகவும், வேலைப்பளு நிறைந்ததாகவும் இருக்கும். அலுவலகத்தில் விடுமுறை கேட்க திட்டமிட்டிருக்கும் போது, முக்கியமான வேலை அதற்கு தடையாக வரலாம். நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல் நலனில் அக்கறை வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஊஞ்சல்

விருச்சிகம்:

மேலதிகாரிகள் உங்கள் மீது தனது அதிகாரத்தைக் காட்டக்கூடும். எனவே வேலை சம்பந்தமான முன் தயாரிப்புகளை சரியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டும். உடல் கோளாறுக்காக மருத்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரலாம், இருப்பினும் விரைவில் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய அறிவிப்பு பலகை

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வழக்கத்தை விட நாள் மெதுவாக நகர்வது போல் தோன்றலாம். ரியல் எஸ்டேட் விஷயங்களில் யாராவது உங்கள் உதவியை நாடலாம். இதுநாள் வரையில் ஒரே மாதிரியான வேலையை மீண்டும், மீண்டும் செய்வது போல் சலிப்பு தோன்றிருந்தால், தற்போது புது உற்சாகம் பெற்றது போல் உணரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பச்சை நிற கவர்

மகரம்:

தொலை தூரத்தில் இருக்கும் நண்பருடன் தொடர்பில் இருப்பது வணிகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று எந்த அளவிற்கு கடினமாக வேலை செய்கிறீர்களோ, அதே அளவிற்கு மாலைப்பொழுது வேடிக்கையானதாக கழியும். செரிமானம் அல்லது அஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புஷ்பராகம்

கும்பம்:

இன்று நீங்கள் ரோல் மாடலாக நினைக்கூடிய நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். வீடு மற்றும் அலுவலகத்திலும் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் திட்டமிடலாம். உங்களுடைய தாயார் மன நல பிரச்சனை அல்லது கவலையால் அவதியுறக்கூடும், அதற்கு மருத்துவ கவனிப்பு அல்லது சிகிச்சை தேவைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கீரிடம்

மீனம்:

இன்றைய தினம் வேலைகள் மிகவும் கடினமானதாக இருக்கலாம். உங்களைப் பற்றி வெளியில் வதந்தி பரப்புபவர் கொண்டிருப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் நிலவும். உடல் நலனைக் காக்க உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஓவியம்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News