ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 11, 2022) எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 11, 2022) எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களை தேடி வரக்கூடிய பொறுப்பு ஒன்றின் மூலமாக மாபெரும் வாய்ப்புகள் கிடைக்கும். மன அழுத்தம் காரணமாக பதற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர் கொத்து.

ரிஷபம்:

கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்யாத எந்த ஒரு பணியையும் செய்ய வேண்டாம். திட்டமிட்ட பொறுப்பு ஒன்றை நிறைவு செய்வதன் மூலமாக பாராட்டு கிடைக்கும். குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளான்ட்.

மிதுனம்:

உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய நபர் ஒருவரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. முன் எப்போதையும் விட மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. அண்மையில் நீங்கள் தொலைத்த மதிப்புமிக்க பொருள் மீண்டும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரும்பு டவர்.

கடகம்:

சர்வதேச அளவிலான வாய்ப்பு தேடி வரும். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த திட்டம் ஒன்றுக்கு இப்போது ஒப்புதல் கிடைக்கும். உடல் நலன் சார்ந்த மாபெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஷோஃபா.

சிம்மம்:

காரணமின்றி நீங்கள் தாமதப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். வீடு சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உங்களின் கவனம் தேவைப்படுகிறது. நெருங்கிய நண்பரிடம் இருந்து சாதகமான செய்தி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோடுகள்.

கன்னி:

உங்கள் பணிகளுக்கு பலவித தடைகள் ஏற்படக் கூடும். எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் சிரமம் எடுத்து நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த பணவரவு இன்றைய நாளில் வந்து சேரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காபி ஷாப்.

துலாம்:

புதிய பிரச்சினை ஒன்று உங்கள் கவனத்தை திசை திருப்புவதாக அமையும். எனினும் இது தற்காலிகமானது. ஆன்லைன் கோர்ஸ் படிப்பது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். உங்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையின் காரணமாக ஊக்கமாக உணர்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முயல்.

விருச்சிகம்:

நீங்கள் செய்யப் போகும் முதலீடு கவலைக்குரியதாக மாறும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் உங்கள் குழுவினர் சிறப்பாக செயல்படுவார்கள். வீட்டில் உள்ளவர் சொல்லும் அறிவுரைகளை மிகுந்த கவனம் கொடுத்து கேட்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கால்பந்து போட்டி.

தனுசு:

அலுவலகப் பணி சார்ந்து நீங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கலாம். வீட்டில் ஏதோ சில பிரச்சனைகள் உண்டாகும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலமாக வழக்கமான பணிச்சுமைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோலார் பேனல்.

மகரம்:

எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் செய்துள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. இதனால் மனம் வருத்தம் கொள்ளும். உங்கள் தொழில் சார்ந்த சீனியர் கொடுக்கும் அறிவுரை ஒன்று பரிசீலனை செய்ய உகந்ததாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல்.

கும்பம்:

தொந்தரவு செய்யக்கூடிய சில நபர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க விரும்பினால் அதை கட்டாயம் கடைப்பிடிக்கவும். உங்களுக்கு சிலர் துரோகம் செய்யக்கூடும். ஆழ்மனம் சொல்வதை கேட்டு நடக்கவும். தியானம் செய்வது பலன் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேன்கூடு.

மீனம்:

யாரோ ஒருவர் தூரத்தில் இருந்து உங்களை காதல் பார்வையோடு அணுகி வருகின்றனர். புதிய வாய்ப்பு ஒன்று உங்கள் பணிகளை விரிவாக்கம் செய்ய உதவியாக அமையும். உங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பானை.

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks