ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 1, 2022) பணியிடத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இருக்கும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 1, 2022) பணியிடத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இருக்கும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

துன்பம் மிகுந்த காலங்களில் வாழ்க்கையின் அடிப்படை கட்டமைப்பை நோக்கி செல்கிறீர்கள். ஒரே மாதிரியான வாழ்க்கை முறையால் சலிப்பு ஏற்பட்டிருக்கும். இனி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பணம் சார்ந்த விஷயங்களும் இனி முன்னோக்கிச் செல்லும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பார்வை மாடம்

ரிஷபம்:

உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அதற்கு தீர்வு காணும் நேரம் இது. குடும்பத்தினர் தொடர்புடைய பிரச்சினையாக இருப்பின் இனியும் அதை நீட்டித்துச் செல்ல வேண்டாம். சமயத்திற்கு தகுந்த நல்ல வாய்ப்பு உங்களை தேடி வர இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்பிரிங்

மிதுனம்:

ஏதேனும் விவாதத்தின்போது ஆழ்ந்து கவனிப்பது இயல்பான விஷயம் தான். அதே சமயம், அதனை வாழ்க்கையில் எதிரொலிக்க வேண்டிய தருணம் இது. உங்களிடம் இருந்து விலகிச் சென்ற காதல் உறவு ஒன்று மீண்டும் தொடர்புகொள்ள நினைக்கிறது. உங்கள் பணி மற்றும் பணித்திறனை முன்னெடுத்துச் செல்ல நினைக்கிறீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூங்கில் செடி

கடகம்:

பணி சார்ந்து திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் முயற்சி செய்யும் ஒரு விஷயத்திற்கு இப்போது ஒப்புதல் கிடைக்க இருக்கிறது. நேர திட்டமிடுதல் அவசியம். இருப்பினும் உங்களுடன் சேர்ந்து இருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உங்கள் வாழ்க்கை துணை நினைக்கக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கலைநயமிக்க ஓவியம்

சிம்மம்:

புதிய இலக்குகள் சிறகடித்து பறக்க இருக்கின்றன. நம்பிக்கை என்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளை மீறிய புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் அறிமுகம் ஆக இருக்கிறார். அவர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா செடி

கன்னி:

கடந்த சில மாதங்களாக உங்கள் செயல்பாடுகள் ஒரே திசையை நோக்கியதாக உள்ளன. அங்கிருந்து இப்போது பலன் பெறுவதற்கான தருணம் இது. புதிய வணிகம் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் உதிக்கும். நண்பர்கள் மற்றும் அலுவலகப் பணி இடையே நேர மேலாண்மையை கடைப்பிடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அடையாள அறிகுறி

துலாம்:

புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு வாழ்க்கையில் நிறைய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், அவை நீடித்து நிற்காது. வாழ்க்கையில் புதிய விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், பழையதை மறந்து விட வேண்டாம். வாழ்க்கையில் வர இருந்த புதிய நகர்வு இப்போது தாமதமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அழகான பொருட்கள்

விருச்சிகம்:

உங்களின் உடனடி ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சில விஷயங்கள் முடிந்து விட்டதாக நீங்கள் நினைத்தாலும், அதன் மீது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உறவுகள் பலப்பட இருக்கின்றன. பரஸ்பர புரிதல் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ்

தனுசு:

குடும்பத்திலும், அலுவலகப் பணி சார்ந்தும் ஒரே சமயத்திலும் பல விஷயங்களை கையாளுவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களுடனான தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். புதிய பார்ட்னர்ஷிப் வேண்டும் என்றால் கொஞ்சம் காத்திருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்

மகரம்:

கடன் பிரச்சினைகளை சுமூகமாக கையாள முடியும். இதற்காக நீங்கள் மிகக் கடினமான முயற்சிகளை செய்திருப்பீர்கள். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு வர இருக்கிறது. உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தேவையை உணருவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா

கும்பம்:

சுற்றியுள்ள மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கலையை அறிந்தவர்கள் நீங்கள். ஆகவே, உங்களிடம் இருந்து சில விஷயங்களை கேட்க வேண்டும் என்று பிறர் எதிர்பார்க்கின்றனர். ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது நல்ல தருணம் ஆகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உயரமான கிளாஸ்

மீனம்:

ஆற்றல் முழுவதும் சிந்தனையை நிறைவு செய்ய இருக்கின்றன. ஆனால், உடல் ரீதியாக இயங்குவதற்கு சில தடைகள் இருப்பதாக உணருவீர்கள். ஆன்லைன் பயன்பாடு அதிகரிக்க உள்ளது. குழந்தைகள் உங்களிடம் கனிவோடு பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு

First published:

Tags: Oracle Speaks