முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 21, 2022) திறமைக்கான பாராட்டு கிடைக்கும்

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 21, 2022) திறமைக்கான பாராட்டு கிடைக்கும்

ராசி பலன்

ராசி பலன்

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய (August 20)தினசரி ராசி பலன் இதோ...

  • Trending Desk
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்கள் வாழ்வில் இன்று நீங்கள் வெற்றிடத்தை உணர்வீர்கள். இன்று உங்களது சுயமரியாதை மற்றும் சுய மதிப்பை சிறப்பாக கையாள வேண்டும். போராட்டமான நாளாக இருந்தாலும், உங்களது கடின முயற்சியை கை விடாதீர்கள். ஒரு சொத்தில் உடனடியாக முதலீடு செய்யத் திட்டமிடுவது நல்ல யோசனையல்ல.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சுத்தியல்

ரிஷபம்:

நீங்கள் எதுவும் கேட்காமலேயே உங்களுக்கு சிலர் ஆலோசனைகள் சொல்வார்கள். அவர்களிடம் கவனமாக இருங்கள். உங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து பிறரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதீர்கள். உங்கள் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவ கூடிய பயணங்களை திட்டமிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டாட்டூ

மிதுனம்:

இன்று மனரீதியாக வலுவாக உணருவீர்கள் மற்றும் நீங்கள் யாரிடமாவது எதையாவது வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து இத்தனை நாள் முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்த இன்று சரியான நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்டன்

கடகம்:

பல ஆண்டுகளாக நீங்கள் போற்றி பாராட்டும் ஒருவரிடம் இருந்து நீங்கள் இன்று பாராட்டை பெறலாம். இன்று உங்களுக்கு வளரும் நம்பிக்கை உங்கள் எதிர்கால திட்டங்களை நோக்கி உங்களை உந்தி தள்ளும். பணியிடத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள நபரிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூறைகாற்று

சிம்மம்:

உங்களுக்கு சில நாட்களாகவே இருக்கும் பீதி, கவலை, தூக்கமின்மை எல்லாமே தற்காலிகமானது. முதலில் உங்கள் உடல் மற்றும் மனதை அமைதியாக வைக்க தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வாழ்வில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி தான் வரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர் அல்லி

கன்னி:

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பற்றி தவறாகப் பேசுவதற்கான காரணங்களை தேடலாம். ஆனால் இது உங்களைப் பாதிக்காது, ஏனென்றால் இது போன்ற எதற்கும் எதிர்வினையாற்றும் அளவுக்கு நீங்கள் இன்று வலுவாக உணர்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய என்ட்ரி கேட்

துலாம்:

நீங்கள் நீண்ட காலமாக தொடர்பு கொள்ள விரும்பும் நபரை இன்று எப்படியாவது அணுகி விட முயற்சிப்பீர்கள். இந்த முயற்சிகள் இன்று வெற்றி பெறும். கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் இன்று விலகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆலமரத்தின் வேர்கள்

விருச்சிகம்:

மற்ற நபரால் தீர்மானிக்கப்படும் வாழ்க்கை உங்களுக்கு இல்லை என்றால் உங்களை நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கும் நாளாக இன்று இருக்கும். உங்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்களால் நீங்கள் ஆழமாக பாதிக்கப்படலாம். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும், இன்னும் சில நாட்களுக்கு இது நீடிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாஸ் செட்

தனுசு:

கடந்த காலத்தில் உங்கள் திறமையை சந்தேகித்தவர்கள் இன்று உங்கள் மதிப்பு மற்றும் திறமைகளை புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உங்களை கடந்த காலத்தில் காயப்படுத்திய ஒருவர் உங்கள் வாழ்க்கையை விட்டு இன்று முற்றிலும் விலகி உங்களுக்கு மன நிம்மதி அளிப்பார். நீங்கள் ஒருசில விஷயங்களை முடிக்க கடினமாக போற்றாத வேண்டியிருக்கும் என்று நினைப்பீர்கள், ஆனால் அவை எளிதாக முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவிகள்

மகரம்:

தெளிவான மனநிலை மற்றும் சமநிலை பார்வை இன்று உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும். உங்களின் இந்த அணுகுமுறை வெற்றிகளை மட்டுமல்ல உங்களுக்கு மகத்தான புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். மேலும் உங்கள் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

கும்பம்:

நீங்கள் காலமாக காத்திருந்த விஷயங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக நடக்கும். உங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் உங்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன்களை இன்று பெறுவீர்கள். உங்களுக்கான வாய்ப்பு உங்களுக்கே என்று தீர்க்கமாக செயலாற்றுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபிக் க்யூப்

மீனம்:

விஷயங்கள் உங்கள் கைகளுக்கு வருவதற்கு நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், அவசரம் காட்டாதீர்கள். சில காலமாக நீங்கள் சந்தித்து வரும் சிக்கல்களை ஒவ்வொன்றாக தீர்க்க பொறுமை அவசியம் என்பதால் பதட்டம் தேவை இல்லை. பொறுமை உங்களை கூலாக வைத்திருக்கும் என்பதால் அதை இழக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விவசாய நிலம்

First published:

Tags: Rasi Palan