Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (மே 24, 2021)

இன்றைய ராசிபலன்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Rasi Palan May 24, 2021

  • Last Updated :
  • Share this:
    மேஷம்: இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    ரிஷபம்: இன்று எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    மிதுனம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    கடகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    சிம்மம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    கன்னி: இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    துலாம்: இன்று வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    தனுசு: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    மகரம்: இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    கும்பம்: இன்று எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். பணவரத்து அதிகப்படும்  அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    மீனம்: இன்று எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
    Published by:Vijay R
    First published: