Today Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 01, 2021)

Today Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 01, 2021)

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய (மே 1, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்இன்று குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்: 4, 6

    ரிஷபம்இன்று பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட எண்: 2, 9

    மிதுனம்இன்று பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்: 9, 3

    கடகம்இன்று கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

    அதிர்ஷ்ட எண்:  4, 6

    சிம்மம்இன்று தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.  நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 5, 6

    கன்னிஇன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 3, 7

    துலாம்: இன்று புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண பக்கியமும் கிட்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

    அதிர்ஷ்ட எண்: 1, 7

    விருச்சிகம்இன்று என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண்: 4, 5

    தனுசு: இன்று எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்: 5

    மகரம்இன்று மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 2, 3

    கும்பம்இன்று வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

    மீனம்இன்று எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: