Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 22, 2021)

Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 22, 2021)

இன்றைய ராசிபலன்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology March 22, 2021

  • Share this:
    rasi palan today
    இன்றைய ராசிபலன் 22-03.21


    மேஷம்:இன்று மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


    ரிஷபம்:இன்று எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்;அதிர்ஷ்ட எண்கள்: 4, 6


    மிதுனம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5


    கடகம்:இன்று உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6


    சிம்மம்: இன்று வீண்அலைச்சல் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


    கன்னி: இன்று காரிய தடைகள் எதிலும் தாமதமான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை;அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9


    துலாம்:இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்று தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு;அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


    விருச்சிகம்: இன்று எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்;அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


    தனுசு:இன்று கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்;அதிர்ஷ்ட எண்: 1, 6


    மகரம்: இன்று மாணவர்கள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சல், காரிய தாமதம், டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்;அதிர்ஷ்ட எண்: 5, 6


    கும்பம்: இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு;அதிர்ஷ்ட எண்: 4, 6


    மீனம்:இன்று ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்;அதிர்ஷ்ட எண்: 2, 9
    Published by:Tamilmalar Natarajan
    First published: