Home /News /spiritual /

Rasi Palan : துலாம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

Rasi Palan : துலாம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

துலாம்

துலாம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

    துலாம்

    இந்த வாரம் மங்கள காரியங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

    தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

    பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி