ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எதிர்பாராத பணவரவு கிடைக்கும்... துலாம் ராசிக்கான நவம்பர் மாத பலன்கள்!

எதிர்பாராத பணவரவு கிடைக்கும்... துலாம் ராசிக்கான நவம்பர் மாத பலன்கள்!

துலாம்:

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் பணியை முன்னெடுத்து சென்று சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இது நாள் வரையிலான உங்கள் கடின உழைப்பிற்கு உரிய பலன் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் இன்று குறையும் என்பதால் நிம்மதியடைவீர்கள்.

பரிகாரம்: வெளியே செல்லும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்கவும்

துலாம்: புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் பணியை முன்னெடுத்து சென்று சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இது நாள் வரையிலான உங்கள் கடின உழைப்பிற்கு உரிய பலன் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் இன்று குறையும் என்பதால் நிம்மதியடைவீர்கள். பரிகாரம்: வெளியே செல்லும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்கவும்

துலாம் ராசிக்காரர்களுக்கான நவம்பர் மாத ராசி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை:

  ராசியில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - சுக ஸ்தானத்தில் சனி, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

  கிரகமாற்றங்கள்:

  09-11-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  13-11-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  28-11-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  29-11-2022 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:

  அனைவருடன் நல்லமுறையில் பழகக்கூடிய துலா ராசி அன்பர்களே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

  தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

  குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.

  பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

  அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

  கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

  மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

  சித்திரை 3, 4 பாதம்:

  இந்த மாதம் தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.  வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

  சுவாதி:

  இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்வது  நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது  நன்மைதரும்.   வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

  விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

  இந்த மாதம் ஆன்மிக எண்ணம்  ஏற்படும்.  விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை  காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல்  பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.

  பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

  சந்திராஷ்டம தினங்கள்: 09, 10, 11

  அதிர்ஷ்ட தினங்கள்: 03, 04; 30

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Rasi Palan