#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)
இன்று நல்ல முடிவுகளை மாலை நேரத்தில் எடுப்பது சிறந்த பலனை தரும். மேலும் இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் நேர்மறையானதாக இருக்கும், ஆனால் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் உங்களை காயப்படுத்த கூடும். எனவே எப்போதும் கவனமாக இருங்கள். உங்களின் செயல்திறனை மேம்படுத்த, பணியில் புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். நடிகர்கள் மற்றும் பொதுப் பேச்சாளர்களுக்கு இன்று வளர்ச்சி கிடைக்கும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், உலோக உற்பத்தியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் பல சலுகைகளைப் பெறுவார்கள். இன்று கெமிக்கல் நிறைந்த புராடக்ட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண் 3
தானம்: ஏழைகளுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்
# எண் 2:( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
காலை நேரத்தில் வெந்நீரில் குளிப்பது சோர்வை போக்கும். இன்று உங்கள் குடும்ப சண்டைகளில் இருந்து விலகி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சிறந்த முறையில் துணைபுரியும் எனவே உங்கள் இதயம் சொல்வதை கேட்டு நடக்க முயற்சி செய்யுங்கள். இன்று உங்களின் பிடிவாதத்தை குறைத்து உங்கள் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம் இது. அரசியல்வாதிகள், ஊடகங்கள், விவசாயிகள், வங்கியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
தானம்: ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்
# எண் 3: (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
இன்று அரசியல்வாதிகள் தங்களின் நேரத்தை தங்களால் இயன்றவரை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். ஊடகத்துறையில் உள்ளவர்கள் சிறந்து விளங்க வேண்டிய நேரம் இது. உங்களின் ஆளுமை திறன் உங்கள் அணியை வழிநடத்தி வெற்றியை அடைய உதவுகிறது. நாடகக் கலைஞர்கள் சிறந்த சலுகைகளை பெறுவார்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் இன்று நண்பர்களுடன் இருக்கும்போது நிதி விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை இன்று பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
தானம்: தேவைப்படுபவர்களுக்கு பழுப்பு அரிசியை தானம் செய்யுங்கள்
# எண் 4: ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
நீங்கள் இன்று பழைய பணிகளை முடிக்கவும், அவற்றிலிருந்து பணம் பெறவும் வாய்ப்பு உள்ளது. அனைத்து முக்கிய முடிவுகளும் சரியான நேரத்தில் எடுத்து, அதிக லாபத்தை சம்பாதிக்க கூடிய நாள் இன்று. உங்களின் தற்போதைய திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். இன்று நீங்கள் அனைத்து பணிகளையும் சரியாக முடிப்பீர்கள். இன்று தானியங்களை தானம் செய்வதால் பல பலன்களை பெறுவீர்கள். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்றவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் பெருமிதமும், உற்சாகமும் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9
தானம்: கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு உப்பு நிறைந்த உணவை தானம் செய்யுங்கள்
# எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
உங்கள் ஆளுமை திறன் உங்கள் முதலாளியையும் குழுவையும் தொடர்ந்து ஏற்க செய்யும். எனவே இன்று உங்களுக்கான தொழில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று அனைத்து விற்பனை இலக்குகளும் எளிதாகவும் வேகமாகவும் அடைந்து விடுவீர்கள். எனவே உங்களுக்கான வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் பெற அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் துணை நிற்கும். விளையாட்டு வீரர்கள், அறிவிப்பாளர்கள், நகைக்கடைக்காரர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் சிறந்த பலனை பெற. வெளியில் செல்லும் போது பச்சை நிற உடைகளை அணியுங்கள். இன்று வாழ்க்கைக்கு ஏற்ற முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்களின் காதலை முன்மொழியவும் செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: ஏழைகளுக்கு வெள்ளை அரிசியை தானம் செய்யலாம்
#எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
பரஸ்பர நம்பிக்கையைப் பெறுவது கடினமாகத் தோன்றிவதால் சில பாதிப்புகள் இன்று உங்களுக்கு உண்டாகும். சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் உங்களின் நேர்மையைத் தவறாகப் பயன்படுத்துவார்கள், எனவே நடைமுறையில் சில சமயங்களில் இராஜதந்திரமாக இருக்க வேண்டியவது அவசியம். நீங்கள் சுறுசுறுப்பாகவும் பல பணிகளை ஒன்றாகச் செய்து முடிப்பீர்கள். காதல் உணர்வு இன்று உங்கள் மனதை ஆளும். இருப்பினும் இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்கள் மற்றவர்களின் இதயத்தில் நல்ல இடத்தை பிடித்து மிகவும் மதிக்கப்படுவீர்கள். உங்கள் தோளில் அதிகமான வீட்டுப் பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டாம். ஏனெனில் உங்களால் அனைத்தையும் சமாளிக்க முடியாது. ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மற்றும் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமாக நிறைந்ததாக இருக்கும். இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டிய நாள். எதிர்காலத்திற்கான கல்வியில் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுங்கள், அது உங்களின் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோவிலில் ஏழைகளுக்கு தயிரை தானம் செய்யுங்கள்
#எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
இன்று நீங்கள் பெரிய ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பீர்கள், ஆனால் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வந்து விடுவீர்கள். இன்று உங்களுக்கு அதிக லாபம் அல்லது அதிக நஷ்டம் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் பக்குவத்தை பெறுங்கள். பெரியவர்கள் மற்றும் குருவின் ஆசீர்வாதங்களைப் பெற்று, உங்கள் நாளை தொடங்குங்கள். உங்கள் ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் உங்கள் சொத்து மதிப்பை கூட்டும். பண முடிவுகளில் அறிவு மற்றும் ஞானத்தை பயன்படுத்த வேண்டிய நாள். இன்று உங்கள் ஊழியர்களை நம்புவதைத் தவிர்க்கவும். உங்கள் நேர்மைக்கு ஈடாக காதல் உறவு அவநம்பிக்கையால் பாதிக்கப்படும். ஸ்டேஷனரி, டெக்னாலஜி, அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை மற்றும் தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாளாக அமையும். உங்கள் நண்பர்களிடம் இன்று சிறிது நேரத்தை செலவிடுங்கள்.
முதன்மை நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
தானம்: தாமிர உலோக பாத்திரங்களை தானமாக வழங்குங்கள்
#எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
இன்றைய நாள் சிறப்பாக அமைய உழைப்பை செலுத்துங்கள். உங்கள் எண்ணங்களின் கடினத்தன்மையை விட்டுவிட்டு, வாய்ப்பை ஏற்றுக்கொள்வது சிறந்தது. பணியாளர்களுடன் மென்மையான பேச்சைப் பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை கவனித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான நேரம் இது. பெரியவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டிய நாள். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும் இன்று நல்ல நாள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம். இன்றைய நாளில் செழிப்பைக் கொண்டுவர சிவபெருமான் மற்றும் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6
தானம்: ஆசிரமங்களில் உள்ள ஆடைகள் மற்றும் பாத்திரங்களை தானம் செய்யுங்கள்
#எண் 9:( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
எவ்வளவு தாராள மனப்பான்மையுடன் இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் வெற்றி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரம், பணம், அங்கீகாரம், ஆடம்பரம் மற்றும் புகழ் ஆகியவை இன்று உங்களை தேடி வரும். நடிப்பு, ஊடகம், ஆங்கரிங், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றில் உள்ளவர்கள் புதிய உயரங்களைக் அடைவார்கள். கல்வி அல்லது படைப்புக் கலையில் சிறந்து விளங்க கூடிய நாள். குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்ய வேண்டிய நாள் இன்று. இன்றைய நாளை நேர்மறையாகத் தொடங்க மாதுளையை சாப்பிட வேண்டும்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்கள்: 9 மற்றும் 6
தானம்: சிவப்பு நிற தானியங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
ஜூலை 25 அன்று பிறந்த பிரபலங்கள்: சோம்நாத் சாட்டர்ஜி, பால் கிருஷ்ணா, ஜிம் கார்பெட், ராகுல் மகாஜன், ஹர்சிம்ரத் கவுர் பாதல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology