#எண் 1: 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
இன்று குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் நண்பர்களால் தடைகள் உருவாக்கப்பட்ட போதிலும், உங்கள் திறமையால் இந்த நாளை வெல்வீர்கள். உங்கள் நிபந்தனைகளுக்கு ஏற்ப நீங்கள் செயல்படுங்கள். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், ஆனால் உறவுகளில் நம்பிக்கையைப் பெறுவது கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். வெற்றியை அடைய இன்றே இராஜதந்திரத்தை கடைபிடியுங்கள். வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவுகளை ஏற்படுத்த இன்று ஒரு நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
தானம்: இன்று மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யுங்கள்
# எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
வீட்டிலிருந்து வேலை செய்வது இன்றைய காலகட்டத்திற்கு ஒரு சிறந்த யோசனை அல்ல. உங்கள் கருணைமிக்க குணம் அனைத்து வாய்ப்புகளின் கதவுகளையும் திறக்கும். இன்று நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள். இன்றைய நாளை சிறப்பாக தொடங்க சந்திர பகவானை வணங்கி, வெள்ளை நீயே ஆடையை அணியுங்கள். இன்று உங்களுக்கு இராஜதந்திர தொடர்புகள் கிடைக்கும். அன்பானவர்களுடன் உணர்ச்சிப் பூர்வமான நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த நாள். இன்று உங்கள் கனவுத் திட்டங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். இறுதியில் இந்த நாளை ஓய்வு நேரத்துடன் முடிக்க தயாராக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண் 2
தானம்: ஏழைகளுக்கு சர்க்கரையை தானம் செய்யுங்கள்
#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
காலையில் சந்தனத்தை நெற்றியில் அணியுங்கள். ஆலோசனை நிறுவனங்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கும். பழைய சச்சரவுகளை நண்பர்களின் உதவியுடன் தீர்த்து விட வேண்டும். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க இன்று ஒரு சிறந்த நாள். ஆலோசனை, விளையாட்டு, கற்பித்தல், பொதுப் பேச்சு, நடனம், சமையல், வடிவமைத்தல், நடிப்பு, மார்க்கெட்டிங் அல்லது தணிக்கை ஆகிய துறைகளில் இருந்தால் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.
# எண் 4 (4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றைய நாள் சாதனை மிக்க நாளாக அமையும். நீங்கள் ஒரு வலிமையான நபர், அதுவே உங்களுக்கான பலமாக. வாடிக்கையாளர் சந்திப்பு என்பது அருமையாகவும் பாராட்டப்படக் கூடியதாகவும் இருக்கும். உங்களின் பெரும்பாலான நேரத்தை பணம் சம்பாதிக்கும் யோசனைகள், உடற்பயிற்சி, தணிக்கை, மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் செலவிட வேண்டும். உற்பத்தி, இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், நடிப்பு, விளையாட்டு மற்றும் அரசியல் போன்றவற்றில் ஈடுபட்டால், புதிய வாய்ப்புகள் இன்று கிடைக்கும். தனிப்பட்ட உறவுகளும் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்காக சிறிது நேரம் செலவிடுவது அவசியம். மனதை சாந்தமாக வைக்க முயற்சியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9
தானம்: ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்
# எண் 5 ( மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
விநாயகப் பெருமானை வழிபாடு செய்து அவரது ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். முதலீட்டுத் திட்டங்கள் அதிக லாபத்தைத் தரும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கடல் நீல நிற ஆடை அணிவது உங்களின் நாளை வெற்றிகரமான நாளாக மாற்றும். பயணப் பிரியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யலாம். இன்று உங்கள் துணையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள், அதனால் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நண்பர்களை சந்திக்க இன்று சிறந்த நாள். மன நிம்மதியுடன் இருக்க எப்போதும் நல்ல சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.
# எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்று குடும்ப உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் வணிக கூட்டாளர்களால் உங்களுக்கு பல பயன்கள் கிடைக்கும். எனவே இன்று உங்கள் கடமைகளை நிறைவேற்றி, உங்கள் விசுவாசத்தை நிரூபிக்கும் நாளாகும். மேலும் பல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டி செல்லும். எனவே எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவீர்கள். பல வாய்ப்புகளால் இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். உங்களின் நண்பர்களுடன் இன்று நேரம் செலவிடுங்கள். இது உங்களுக்கு நல்ல ஆற்றலை தரும், இன்று உங்களின் அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான மதிப்பீடு நடைபெறும். உங்களின் உறவை வலுப்படுத்த உணர்ச்சிகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அக்வா
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோயிலில் வெள்ளி நாணயத்தை தானமாக கொடுங்கள்
# எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
இன்றைய நாள் தனிப்பட்ட குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் கடன்களை அதிகரிப்பதைத் தவிர்க்கவும். இருப்பினும் இன்று நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இன்று உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் செல்லலாம். மாடலிங், அரசியல், சட்டப் பயிற்சி, மருத்துவத் துறை, ஊடகம், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முதலாளியின் ஆலோசனைகளை ஏற்க முயற்சி செய்யுங்கள். இன்று திருமண முயற்சிகள் நிறைவேறும். சிவன் கோயிலுக்குச் சென்று ருத்ராபிஷேகம் செய்வது இன்று உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 7
தானம்: ஏழைகள் அல்லது கால்நடைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்
# எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். எந்த வேலைகளையும் தள்ளி போடாமல் அப்போதே செய்து முடித்து விடுங்கள். வணிக ஒப்பந்தங்களில் இன்று உங்களுக்கு அதிக கவனம் தேவை. ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். உங்கள் பங்குதாரர் உங்களின் அப்பாவித்தனத்தால் ஏற்றவும் செய்யலாம். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொண்டு செய்து நல்ல பலனை இன்று பெறலாம். பணப் பரிவர்த்தனைகளுக்கு இடையில் நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள், எனவே இன்றைய நாள் திருப்தியாக முடிவு பெறலாம். ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். முதியோர் இல்லத்தில் தொண்டு செய்வது இன்று அவசியம்
# எண் 9 (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
கல்வி, நடிப்பு, நகைகள் மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய உறவுகளில் ஈடுபடுவது, நேர்காணல்களில் பங்கேற்பது, புதிய வீடு வாங்குவது, விருந்து வைப்பது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்தும் இன்று சாதகமாகவே இருக்கும். தொழில் தொடர்பான ஆவணங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். அரசியல், ஊடகம், நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் பெரிய வளர்ச்சியை காண்பார்கள். அரசாங்க அதிகாரிகள் சட்ட சிக்கல்களை எதிர்கொள்வார்கள், எனவே இன்று நேர்மையாக இருந்து காரியத்தை நிறைவேற்றுங்கள். டிசைனிங் துறையில் இருப்பவர்கள் நேர்காணல் அல்லது போட்டித் தேர்வுகளை நாட வேண்டும். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். உறவுகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று அதிக கேள்வி கேட்பதைத் தவிர்க்கவும். இன்றைய நாளை சிறப்பாக மாற்றிட உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: கால்நடைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்
ஜூலை 2 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: முகமது அஜீஸ், கவுதமி, ராசா முராத், லிண்ட்சே லோகன் அனுபமா வர்மா
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.