மேஷம்:
இன்றைய நாள் சற்று மந்தமானதாக இருக்கும். மாலையில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவீர்கள். பணி நெருக்கடி சற்று அதிகரித்தாலும், அதை நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கக்கல்
ரிஷபம்:
யாரையேனும் அழைத்துப் பேசுவதை நீண்ட நாட்களாக ஒத்தி வைத்து வருகிறீர்கள் என்றால் அவர்களை தொடர்பு கொள்ள சிறப்பான நாளாகும். உடல் பயிற்சி செய்யாவிட்டால் உடல்நலன் பாதிக்கப்படும். வணிக வாய்ப்புகள் வரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற படிகக்கல்
மிதுனம்:
இன்று அனைத்து ஆற்றல்களும் ஒருங்கிணைந்து இருப்பதை உறுதி செய்யவும். புத்தாக்க திட்டங்களை செயல்படுத்துவீர்கள். திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்புக்கல்
கடகம்:
புதிய நண்பர் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் கடந்து செல்ல இருக்கிறார். அதை தீவிரமானதாக கருத வேண்டாம். வீட்டு நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும். வெளிநபர்களின் தலையீடு தொந்தரவாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு நிழல்
சிம்மம்:
உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களையும், உங்களையும் எளிமையானதாக மாற்றிக் கொள்ளவும். புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் உங்கள் முயற்சியில் தடங்கல் ஏற்படக் கூடும். முதலாளியிடம் இருந்து சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெட்டி
கன்னி:
உங்கள் அன்புக்குரிய நபர்களுக்கு உங்களின் அக்கறை தேவைப்படுகிறது. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் தீர்வு காணவும். உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி தேவை. நேரம் கிடைக்கும்போது வெளியிடங்களுக்கு செல்லவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்
துலாம்:
பணியிடத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். போதிய உறக்கம் கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். ஓய்வின்றி இருக்க வேண்டாம். மாலையில் ஒரு நண்பர் உங்களை சந்திக்கக் கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அணில்
விருச்சிகம்:
எதிர்வரும் குடும்ப விழாவுக்காக நீங்கள் செய்யும் ஏற்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும். தேவையான விஷயங்களை பட்டியலிட்டு, நேரத்தை சேமிக்கவும். புதிய பழக்கத்தின்படி ஒரு வேலையை செய்ய இருக்கிறீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி
தனுசு:
உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நிறைய விஷயங்கள் நடக்க இருக்கின்றன. ஆனால், வெகு விரைவில் நேர்மறையான செய்திகள் கிடைக்கும். உங்களை ஆலோசனை செய்யாமல் குடும்பத்தில் முக்கிய முடிவை எடுக்க இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு ஆடை
மகரம்:
இப்போது நீங்கள் செய்யும் விஷயங்களால் கால விரயம் தடுக்கப்படும். புதிய திறன் ஒன்றை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் பதவியை அடைய வேண்டும் என்று பலர் கண் வைத்து காத்துக் கொண்டுள்ளார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற மாணிக்கம்
கும்பம்:
உங்கள் தனிவாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தாமதம் ஏற்படுவதற்கான காரணமே தெரியாமல் போகலாம். ஆழ்ந்து நோக்கினால் சில ஆச்சரியமான முடிவுகள் தென்படலாம். தோராயமான முடிவு உங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகதக்கல்
மீனம்:
உங்களை நீங்கள் வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாள் ஆகும். சில புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கடந்த கால சாதனைகளை நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம். இன்று புதிய வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Rasi Palan