ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 27, 2022) தேவைப்படும் உதவியும் ஆதரவும் கிடைத்துவிடும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 27, 2022) தேவைப்படும் உதவியும் ஆதரவும் கிடைத்துவிடும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று நீங்கள் திட்டமிட்டதைவிட மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். எதிர்பார்க்காத வேலையில் பெரும்பாலான நேரத்தை நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். முக்கியம் இல்லாத எந்த விஷயங்களுக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: மல்லிகைப் பூ

ரிஷபம்:

இன்று காலையில் உங்களுக்கு நீங்கள் விரும்புவது போல ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஆனால் மதிய நேரத்திற்கு பிறகு வேலை நெருக்கடியை உணர்வீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீங்களாக தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: எலுமிச்சை வாசம்

மிதுனம்:

நிதி ரீதியான நல்ல லாபம் பெறுவதற்கு ஏற்ற நாள். நீண்ட நாட்களாக உங்களுக்கு வராமல் நிலுவையில் இருந்த பணம் கைக்குக் கிடைக்கும். நெருக்கடியான வேலையிலிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: இரண்டு அணில்கள்

கடகம்:

இதற்கு முன் நீங்கள் மேற்கொண்ட திட்டங்கள் அனைத்துமே நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஒருதலை காதல் அல்லது நீங்கள் மட்டும் விரும்பும் உறவுகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே நீங்கள் ஏற்ற முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அரசாங்க வேலையில் மற்றும் மீடியாவில் பணியாற்றுபவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: கழுகு

சிம்மம்:

உங்களுடைய தனிப்பட்ட கண்ணோட்டம் இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு அது பெரிய அளவில் உதவும். நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிப்பதற்கு முயற்சி செய்யலாம். உங்களுடைய கணவன் அல்லது மனைவிக்கு உங்களுடைய ஆதரவு தேவை.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: ஒரு அறிவிப்புப் பலகை

கன்னி:

நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்கவும். அதனுடைய வெளிப்பாடு எப்படி இருந்தாலும் அதை நீங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய சமீபத்திய செயல்கள் அனைத்துமே விமர்சிக்கப்படும்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: மஞ்சள் புஷ்பராகம்

துலாம்:

இன்று அற்புதமான நாள். இதை நீங்கள் உங்கள் விருப்பம்போல முழுமையாக அனுபவித்து செலவிட முடியும். எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்தால் சுலபமாக இருக்கும். இன்று உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: புதிய கேட்ஜெட்

விருச்சிகம்:

உங்களுடைய புதிய பழக்கம் ஒன்று உங்கள் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு நபரை அதிகமாக நம்புவீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள் மனக் கவலையை அதிகரிக்கும். எல்லா வேலையையும் சரியாக செய்வதற்கு ஒரு ரொட்டீனை பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: சரவிளக்கு

தனுசு:

முதிர்ச்சியே இல்லாத உரையாடல்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். பொறுமையாக இருப்பது மிக மிக அவசியம். உங்களுடைய நோக்கங்கள் சரியானதாக இருந்தாலும் நீங்கள் அதை வெளிப்படுத்தும் விதத்தை மேம்படுத்த வேண்டும். உங்கள அக்கம் பக்கத்தினரில் யாரோ ஒருவர் உங்களுக்கான தடையாக இருக்கலாம்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: வெண்ணிலா நறுமணம்

மகரம்:

உங்களுடைய நோக்கங்களை சரி செய்ய வேண்டிய நாள் இது. நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை அப்படியே வைத்திருந்தால், அதை தற்போது செய்து முடிக்க வேண்டும். உங்களுடைய பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டு புதிய சவால்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: காளான் செடி

கும்பம்:

மெதுவாக இருந்தாலுமே, வளர்ச்சியும் செல்வ செழிப்பும் உங்களுக்கானது. புதிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் தடுக்காமல், அதன்படி செயல்படுங்கள். வழக்கமாக ஒரே வேலையை செய்வது உங்களுக்கு சலிப்பாக இருக்கும். ஆனால் அதை சுவாரஸ்யமான முறையில் செய்வதற்கு நீங்களே வழியை கண்டுபிடித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: தெளிவான வானம்

மீனம்:

நீங்கள் எதுக்கெல்லாம் பயன்தீர்களோ, அதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற ஒரு உணர்வு உங்களுக்கு அடிக்கடி உண்டாகிறது. ஆனால் இன்றைய தினத்தை நீங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் கடந்து விடுவீர்கள். உங்களுக்கு தேவைப்படும் உதவியும் ஆதரவும் கிடைத்துவிடும். உங்களை நோக்கி வரும் புதிய வாய்ப்புகளை தட்டிக் கழிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறி: ஊதா நிற பூக்கள்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks