Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உடல் நலனின் அக்கறை காட்ட வேண்டும்... (பிப்ரவரி 26,2022

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உடல் நலனின் அக்கறை காட்ட வேண்டும்... (பிப்ரவரி 26,2022

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

மேஷம்:

சில நேரங்களில் ​​நீங்கள் எதிர்பார்த்ததைப் போலவே விஷயங்கள் நடக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் படிகம்

ரிஷபம்:

நீங்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் எப்படியோ சோம்பல் உங்களை பின்னுக்கு இழுக்கும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் சில சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். சமீபத்தில் நீங்கள் சந்தித்த நபரைப் பற்றிய உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய அஸ்தமனம்

மிதுனம்:

எதிலும் விறுவிறுப்பு வேண்டும் என்று யார் உங்களுக்கு அறிவுரை கூறினாலும், அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவையில்லை. எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நன்கு சிந்தித்து மறுபரிசீலனை செய்ய உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது. பொறுமையாக செயல்படுங்கள். தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள உங்கள் மன வலிமையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தியானம்

கடகம்:

வெற்றியின் ஏணிப்படியில் ஏற உங்களுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கலாம். யாரேனும் தொலைதூரத்திலிருந்து வருகை தந்திருந்தால், அவர்களுக்கு போதுமான நேரத்தையும் , நல்ல கவனிப்பையும் கொடுக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து சில ஆச்சரியம் காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குவளை

சிம்மம்:

உங்களிடம் இருந்து ஆதாயம் கிடைக்கும் என்பதால் சிலர் உங்களிடம் நட்புறவாடுவார்கள். இல்லையெனில் உங்களை பார்க்கவோ உங்களிடம் பேசவோ மாட்டார்கள். எனவே அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு கம்பம்

கன்னி:

நீங்கள் உங்கள் திட்டத்தை விரிவாக்கம் செய்ய யோசித்திருந்தால், இப்போது அதற்காக வேலை செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் உள் வழிகாட்டுதல் மிகவும் வலுவாக உள்ளது. மனது கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செதுக்கப்பட்ட மரப்பெட்டி

மேலும் படிக்க...

துலாம்:

எந்தவொரு பாசாங்கும் உங்களை வெகுதூரம் அழைத்துச் செல்லாது. நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்க வேண்டும். புதிய வாகனம் வாங்குவது அல்லது பழைய வாகனத்தை மாற்றுவது பற்றி யோசிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை மலர் திரை

விருச்சிகம்:

அதிக மன அழுத்தம் உங்களை திசைதிருப்பலாம். கடந்த சில நாட்களாக உங்கள் பெற்றோர்கள் உங்களை கவனித்து வருகிறார்கள். உங்களுக்கு விருப்பமான ஒரு பாடத்தை தொடர நினைத்தால், அதை உங்கள் பெற்றோர்களுக்கு தெளிவாக்குவது

உங்கள் கடமை. அவ்வாறு செய்தால் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் பானை

தனுசு:

தொலைதூரத்தில் இருந்து வரும் நல்ல செய்திகள் இன்று உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதியாக இருக்கலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுக்கு சில நிதி உதவி தேவைப்படலாம். தள்ளிப்போடும் பழக்கம் இப்போது தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு சுழற்சி

மகரம்:

நீங்கள் பரீட்சைக்குத் படிக்கிறீர்கள் என்றால், இரவு நேரத்தில் படிப்பதற்கு பதிலாக அதிகாலை நேரத்தில் படிக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் எல்லோருடனும் அல்லது உங்களைச் சுற்றியுள்ள எவருடனும் பகிர்ந்து கொள்வதை நீங்கள் நிறுத்த வேண்டும். உங்களின் உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரகசிய குறியீடு

கும்பம்:

இன்று உங்களுக்கு ஓரளவு நிம்மதியான நாளாக இருக்கும். ஆனால் நிதியில் இயக்கமின்மை உங்களை சிந்திக்க வைக்கும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு தனிப்பட்ட முறையில் உங்களின் ஆலோசனைகள் தேவைப்படலாம். நீங்கள் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தால், இப்போதைக்கு அதை ஒத்தி வைப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இலவங்கப்பட்டை தேநீர்

மீனம்:

கடந்த சில நாட்களில் நீங்கள் செய்த சாதனைகளுக்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய கூட்டாளர்களைத் தேட வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மின்னும் அலங்காரம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி