ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 10, 2022) அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 10, 2022) அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம் :

வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையை உருவாக்கும் உங்கள் முயற்சி இப்போது வெற்றி காணலாம். அலுவலகத்தில் தேவையான சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உங்களுக்குத் ஏற்கனவே தெரிந்த நபர் உங்களுடன் கூட்டு சேரலாம். கடந்த கால அனுபவங்களால் தற்போது யாரை நம்புவது என்பது ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய வாகனம்

ரிஷபம் :

இன்று உங்களுடைய வழக்கமான பணிகளைச் செய்து முடிக்க ஏற்ற நாளாகும். எதிர்பாராத ஒரு செய்தி உங்களை சந்தேகிக்க வைக்கும். புதிதாய் ஏதேனும் உடற்பயிற்சி செய்வதன் மீது உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பெரிய பலகை

மிதுனம் :

உங்கள் சகோதர சகோதரிகளிடம் உங்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம், ஆனால் தற்போதைக்கு அதை பெரிதாக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். நீண்ட காலம் பேசாமல் இருக்கும் ஒரு நபரிடம் பேசுவது போன்ற சிறிய விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் சிறந்தவர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிலிகான் மோல்டு

கடகம் :

ஒரு குறிப்பிட்ட பணியை செய்யலாமா வேண்டாமா என்று நீண்ட நாட்கள் இருந்த சஸ்பென்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வரும். அதைத் தொடரலாமா அல்லது முடிக்கலாமா என்று நீங்கள் முடிவு செய்யலாம். தெளிவான சிந்தனை இருக்கும். சமூக அந்தஸ்து உங்களுக்கு முக்கியமானதாக தெரியக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல ரிப்பன்

சிம்மம் :

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை, நீங்கள் இன்று நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் நல்ல செய்திகளால் நாள் செல்வதே தெரியாது. ஆனால், அலுவலகத்தில் சில போட்டிகளை எதிர்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிடித்த இனிப்பு

கன்னி :

வேலைகளை சின்ன சின்னதாக பிரித்து செய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். எதையும் சரியாக செய்யமுடியவில்லை என்று நீங்கள் மிகவும் விரக்தியாக உணரலாம். உதவி வேண்டுமானால் கேட்பது நல்லது. மற்றவர்கள் உங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தெளிவாக உரையாடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நினைவுப்பரிசு

துலாம் :

உங்களுக்கு நீங்களே சில விஷயங்களை சத்தியம் செய்திருப்பீர்கள். அதை இப்போது நிறைவேற்ற வேண்டிய நேரம். பழைய விஷயங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது போல தோன்றும்,

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காப்பர் பாட்டில்

விருச்சிகம் :

நீங்கள் சமீபத்தில் எதையாவது விரும்பினாலோ அல்லது பெரிய ஆசை கொண்டாலோ, அதற்கு விண்ணப்பிக்க அதிர்ஷ்டமான நாள் இன்று. நீங்கள் மற்றவர்களிடம் உங்களைப் பற்றி அதிகமாக தகவல் பகிர்வதைத் தவிருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – களிமண் கிண்ணம்

தனுசு :

உங்களைச் சுற்றியிருக்கும் ஒரு சிலர் உங்களுக்கு எதிர்மறையாக தோன்றலாம், நீங்கள் அவரை தவிர்க்க முடியாது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும். நீண்ட நடைப்பயணம், புதிய திட்டங்கள் மற்றும் உத்திகள் உங்கள் சிந்தனையைத் தெளிவாக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடி மேசை

மகரம் :

நீங்கள் அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். கடைசி நேர படபடப்பு எல்லா வேலைகளையும் பாதிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தியானம் செய்வது உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரூபிக் கியூப்

கும்பம் :

பழைய கனவு இன்று உங்களை தொந்தரவு செய்வதாக உணரலாம். சின்ன சின்ன முயற்சிகள் பெரிய பலன்களைத் தரும், எனவே நம்பிக்கை தளர விடாமல் முயற்சி செய்யுங்கள். உங்கள் நண்பர் உங்களுக்கு நல்ல வேலைக்கான வாய்ப்பை வழங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாக்லேட்ஸ்

மீனம் :

ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் அறிகுறிகள் தெளிவாக இருக்கும். மழை நாளுக்கு தயாராக இருங்கள். விரைவில் நடக்கக்கூடிய விஷயம் பற்றி ஏதேனும் பயம் இருந்தால், தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வானவில்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News